தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அதனால் மாணவர்களின் பாதுகாப்பில் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி வளாகங் களில் திறந்தவெளி நீர்த்தேக்கங் கள் இருந்தால் அவற்றை மூடவேண்டும். பள்ளி வளாகங் களில் விழும் நிலையில் இருக்கும் மரங்களை அப்புறப்படுத்தவும், உயர் மின் அழுத்த கம்பங்கள், அறுந்து தொங்கும் நிலையில் இருக்கும் மின்கம்பிகளை அகற்ற வும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வகுப்பறைகளில் உள்ள மின் ஸ்விட்ச்கள் மழைநீர் படாத வகையில் பாதுகாப்பாக உள்ளதா என்பதை ஆய்வு செய்யவேண்டும். மாணவர்களைக் கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது. சிதிலமடைந்த கட்டிடங்கள், மேற்கூரைகள், சுற்றுச் சுவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
‘‘மழைக்காலத்தில் இடி, மின்னல் ஏற்படும்போது மரத்தின் கீழே ஒதுங்கக்கூடாது. வழியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்கள், மழைநீர் கால்வாய்களை கவனமாக கடந்துசெல்ல வேண் டும். சாலைகளில் மின் கம்பிகள் கிடந்தால் அருகில் செல்லக் கூடாது. ஆறு, ஏரி, குளங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்’’ என்று மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
பருவ காலங்களில் ஏற்படும் தொற்றுநோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி வளாகங்களில் கட்டிடப் பணிகள் நடக்கும் இடங்களுக்கு மாணவர்கள் செல்லாமல் பாது காப்பது உட்பட அனைத்து வகை யான நடவடிக்கைகளிலும் கூடுதல் கவனம் செலுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இது சம்பந்தமாக முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் தொடர்ந்து நேரில் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment