மதிய உணவுக்குப் பதில் மாணவர்களுக்கு பணம்: மத்திய அரசின் முடிவை ஏற்க ஒடிஸா மறுப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, October 6, 2015

மதிய உணவுக்குப் பதில் மாணவர்களுக்கு பணம்: மத்திய அரசின் முடிவை ஏற்க ஒடிஸா மறுப்பு

ஏதாவது ஒரு காரணத்துக்காக மதிய உணவு வழங்குவது நிறுத்தப்படும் நிலையில், பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவுக்குப் பதிலாக உணவுப் பாதுகாப்புப் படித்தொகை வழங்கும் மத்திய அரசின் முடிவை ஒடிஸா அரசு ஏற்க மறுத்துள்ளது.
மதிய உணவுக்குப் பதிலாக பள்ளிக் குழந்தைகளுக்கு படி வழங்குவதை ஒடிஸா அரசு ஏற்காது. ஏனெனில் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் இடைநிற்றலை இது தடுத்து நிறுத்தாது. எனவே மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாநில உணவு வழங்கல் துறை அமைச்சர் சஞ்சய் தாஸ்வர்மா கேட்டுக் கொண்டார்.
"மதிய உணவுத் திட்ட விதிமுறைகள்-2015' குறித்து கடந்த மாதம் 30ஆம் தேதி அறிவிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது. உணவு தானியங்கள் கிடைக்காமல் போவது, சமையல் கூலி, எரிபொருள், சமையலர், உதவியாளர் இல்லாமல் இருத்தல் உள்ளிட்ட காரணங்களால் மதிய உணவு நிறுத்தப்படும் சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு அடுத்து வரும் மாதத்தில் 15ஆம் தேதிக்குள் உணவுப் பாதுகாப்புப் படியை வழங்க வேண்டும் என்று அந்த அறிவிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
சமையலுக்கு ஆகும் செலவுத் தொகையுடன் சம்பந்தப்பட்ட மாணவருக்கு அளிக்கப்பட வேண்டிய உணவு தானியங்களையும் வழங்க வேண்டும். மதிய உணவை ஏற்க மறுக்கும் மாணவருக்கு இந்த உணவுப்படி பொருந்தாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment