சென்னை பல்கலையில் தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
மழை, வெள்ளம் காரணமாக, சென்னை பல்கலையில், நவ., 28 முதல், டிச., 2 வரையில் நடக்க இருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. இந்த தேர்வுகள் டிச., 14 முதல், ஜன., 6 வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான பட்டியல், பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
இதில், மிலாதுன் நபி பண்டிகை விடுமுறை நாளான, டிச., 24 மற்றும் புத்தாண்டுக்கு முந்தைய நாளான, டிச., 31ல் தேர்வு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment