சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலத்தில் 99.69% பேர் தேர்ச்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, May 28, 2016

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலத்தில் 99.69% பேர் தேர்ச்சி

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 99.69 சதவீதம் பேர் பேர்ச்சி பெற்றுள்ளனர்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மதியம் 1 மணியளவில் இணையதளத்தில் (www.cbseresults.nic.in) வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய 14 லட்சத்து 89 ஆயிரத்து 21 பேரில் 14 லட்சத்து 31 ஆயிரத்து 861 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 96.21 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சற்று குறைந்திருக்கிறது. சென்ற ஆண்டில் 97.32 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

சிபிஎஸ்இ-யின் 10 மண்டலங்களில் திருவனந்தபுரம் மண்டலம் 99.87 சதவீத தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.அதற்கு அடுத்தபடியாக சென்னை மண்டலம் 99.69 சதவீத தேர்ச்சி பெற்று 2-ம் இடத்தைப் பிடித்திருக்கிறது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொருத்தவரையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுவதில்லை. விடைத்தாள் மதிப்பீட்டில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப “கிரேடு” மட்டுமே குறிப்பிடப்படும். எனவே, எஸ்எஸ்எல்சி தேர்வைப் போல ரேங்க் பட்டியல் வெளியிடப்படுவது கிடையாது.

No comments:

Post a Comment