இந்தியாவின் மெகா தேசிய மூவர்ண கொடி ஐதராபாத்தில் ஜூன் 2-ம் தேதி ஏற்றி வைப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 30, 2016

இந்தியாவின் மெகா தேசிய மூவர்ண கொடி ஐதராபாத்தில் ஜூன் 2-ம் தேதி ஏற்றி வைப்பு

தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டையொட்டி ஐதராபாத் நகரில் இந்தியாவில் மிக உயரமாக தேசிய மூவர்ண கொடி பறக்கவிடப்பட உள்ளது. இதற்கான விழாவில் அம்மாநில முதல்வர் சந்திரசேகராவ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைக்கிறார்.

ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. அம்மாநிலத்திற்கு நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆட்சியை பிடித்தது. முதல்வராக சந்திரசேகர ராவ் உள்ளார். இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டை கொண்டாடும் விதமாக ஐதராபாத் நகரில் ஹுசைன்சாகர் ஏரிக்கரையில் உள்ள சஞ்சீவ் பார்க்கில் இந்தியாவில் மிகவும் பிரம்மாண்ட தேசிய மூவர்ண கொடியை நிரந்தரமாக அமைத்திட அம்மாநில அரசு முடிவு செய்தது. இதன்படி கோல்கட்டாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது. மொத்தம் ரூ. 1.08 கோடி செலவில் 303 அடி உயரத்தில் சுமார் 50 டன் எடையுள்ள 6 ஸ்டீல் பைப்புகள் (கொடி கம்பங்கள்) 7 டிரக்குகளில் கொண்டுவரப்பட்டுள்ளன. கொடிகம்பம்( ஸ்டீல் பைப்) உச்சியில் மூவர்ண தேசிய கொடியை அமைக்க 108 அடி நீளமும், 72 அடி அகலம் கொண்ட பாலிஸ்டரால் ஆன 92 கி.கி. எடையுள்ள கொடியும் மும்பையில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. சூறாவளி காற்றும் மழை போன்ற இயற்கை பேரிடர்களால் கொடி சேதமடையாமல் இருக்க கூடுதலாக மூன்று மூவர்ண கொடிகளும் தெலுங்கானா மாநிலம் வந்திறங்கின சுமார் 10 உயரமுள்ள பீடத்தில் மேல் கொடிக்கம்பம் நிலைநிறுத்தப்பட உள்ளது.
வரும் ஜுன் 2-ம் தேதி நடக்க உள்ள விழாவில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்படுகிறது. இந்த விழாவில் முதல்வர் சந்திரசேகரராவ் கலந்து கொள்கிறார். இதன் மூலம் இந்தியாவில் மிக பிரம்மாண்ட தேசிய கொடி என்ற பெருமையை ஐதராபாத் நகர் பெறுகிறது.

No comments:

Post a Comment