மின்னணு கழிவு: 5வது இடத்தில் இந்தியா - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, May 26, 2016

மின்னணு கழிவு: 5வது இடத்தில் இந்தியா

மின்னணு கழிவுகளை உருவாக்குவதில் உலகளவில் இந்தியா 5வது இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 18.5 லட்சம் மெட்ரிக் டன்கள் (உலகளவில் 12 சதவீதம்) தொலைதொடர்பு சாதனங்கள் மின்னணு கழிவுகள் சேர்கிறது. 100 கோடி மொபைல் போன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. இதில் 25 சதவீதம் ஆண்டுதோறும் மின்னணு கழிவாக வருகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஆய்வு நடத்தியவர் கூறுகையில், உலகளவில் இந்தியா இரண்டாவது மொபைல் போன் சந்தையாக உள்ளது. 1.03 பில்லியன் பயன்பாட்டாளர்கள் உள்ளனர். அதே நேரத்தில் மின்னணு கழிவை உருவாக்குவதில் 5வது இடத்தில் உள்ளது. வருடம்தோறும் 18.5 லட்சம் மெட்ரிக் டன் மின்னணு கழிவுகள் சேர்கின்றன. கடந்த வருட் மட்டும் 100 கோடிக்கும் அதிகமான மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்பட்டன எனக்கூறினார்.

இந்தியாவில் உள்ள அமைப்பு சாரா துறையில், இந்தியாவில் உள்ள மின்னணு கழிவை 95 சதவீதம் கையாள முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதை நடைமுறைப்படுத்துவதில் கடினமும், அதிக செலவும் ஏற்பட்டது.

இது தொடர்பாக அசோசெம் வெளியிட்ட அறிக்கையில், மின்னணு கழிவை சேகரிப்பதை, எளிதாகவும் நடைமுறைபடுத்தக் கூடிய வகையிலும் குறித்த காலத்தில் பல கட்டங்களாக சேகரிக்க வேண்டும். மின்னணு கழிவுகளை சேகரிப்பதற்காக உருவாக்கப்படும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment