கட்சிக்காரரை அரசு வழக்கறிஞராக நியமிக்கலாமா?: உச்ச நீதிமன்ற உத்தரவால் சிக்கல் ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 24, 2016

கட்சிக்காரரை அரசு வழக்கறிஞராக நியமிக்கலாமா?: உச்ச நீதிமன்ற உத்தரவால் சிக்கல் !

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின், விருப்பம் போல் கட்சிக்காரர்களை, அரசு வழக்கறிஞராக நியமிப்பதில் தடை ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படும் நிலை உள்ளதால், அரசு வழக்கறிஞர்கள் தேர்வில், கவனமுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின், கட்சி சார்புடையவர்களே, அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுகின்றனர். கட்சியில் பதவி வகித்தவர்கள், உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்ற வழக்கறிஞர்களாக நியமிக்கின்றனர்.

கூட்டணி கட்சிகளை...

மாநிலத்தில் மட்டுமல்ல, மத்தியிலும் இதே நிலை தான் உள்ளது. மத்தியில் யார் ஆட்சி அமைக்கின்றனரோ, அந்த கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள்,
கூட்டணி கட்சிகளைதீர்ப்பாயங்சேர்ந்த வழக்கறிஞர்களை தான், மத்திய அரசு வழக்கறிஞராக, உயர் நீதிமன்றங்களுக்கும், களுக்கும் நியமிக்கின்றனர்.
திறமையை பின்தள்ளி விட்டு, கட்சி சார்புடையவர்கள், கட்சிக்காரர்கள் என்பதற்காக மட்டுமே, இனிமேல் அரசு வழக்கறிஞராக நியமிக்க முடியாது.கடந்த மார்ச் மாதம், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, இதற்கு தடையாக உள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர், நீதிபதி குரியன் ஜோசப் அடங்கிய, 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:மாநில அரசின் பிரதிநிதியாக, அரசு வழக்கறிஞர் ஆஜராகிறார். அதில், பொது மக்கள் நலன் அடங்கி உள்ளது. எனவே, அரசு வழக்கறிஞருக்கு, தகுதி, போதிய அனுபவம், பண்பு இருக்க வேண்டும். அவர்கள் பயமின்றி, பாரபட்சமின்றி, சுதந்திரமாக, நீதிமன்றத்தில் கருத்துகளை முன்வைக்க வேண்டும்.

ஒப்புதல் தேவை

அரசு குற்றவியல் வழக்கறிஞர் நியமனத்தின் போது, உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவை.அதேபோல், மாநில அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் நியமனத்தின் போதும், நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவை.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்த, வைர சேகர் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிலும், 'உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி, திறமையான வழக்கறிஞர்களை, அரசு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும்' என கோரியுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவில், 'மாநில அரசு அமைக்கும் தேர்வு குழு, தகுதியான திறமையான நபர்களை தேர்ந்தெடுத்து, உயர் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். அந்த பட்டியலை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு, பரிசீலித்து ஒப்புதல் அளிக்கும். தன்னிச்சையான நியமனங்களை, ரத்து செய்யலாம்' என, கூறப்பட்டுள்ளது.

எனவே, கட்சிக்காரர்கள் என்பதற்காக மட்டுமே, அரசு வழக்கறிஞர் நியமனம் சாத்தியமில்லை. சட்ட அறிவு, திறமை, அனுபவம், நேர்மை உள்ளவர்களாக இருந்தால், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில்
பிரச்னையில்லை.

No comments:

Post a Comment