டெபிட் கார்டு, கிரிடிட் கார்டை பயன்படுத்தி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவை வரி ரத்து: ரயில்வே - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, May 28, 2016

டெபிட் கார்டு, கிரிடிட் கார்டை பயன்படுத்தி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவை வரி ரத்து: ரயில்வே

டெபிட் கார்டு மற்றும் கிரிடிட் கார்டை பயன்படுத்தி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.30 சேவை வரி ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ரயில் பயணிகள் பலர் தற்போது இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணம் செய்து வருகிறார்கள். இதன் மூலம் ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருப்பது போன்ற சிரமங்கள் தவிர்க்கப்படுகிறது. இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது முன்பதிவு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.30 சேவை வரியை ரயில்வே வசூலித்து வந்தது. இந்நிலையில் டெபிட் கார்டு மற்றும் கிரிடிட் கார்டை பயன்படுத்தி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.30 சேவை வரி ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே அறிவித்துள்ளது. வரும் 1ம் தேதி முதல் இந்த சேவை வரி ரத்து அமலுக்கு வருகிறது என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் வங்கி டெபிட் கார்டு மற்றும் கிரிடிட் கார்டுகளுக்கான சேவை வரியை ரத்து செய்து ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை என்றால் அவர்களை சாதாரண பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment