அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை: மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் உத்தரவு.... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 30, 2016

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை: மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் உத்தரவு....

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பள்ளி வளாகத்தில் நீர்த்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளிப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தால் அவைநன்கு மூடப்பட்டு இருக்கிறதா என்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும். அதன் அருகே மாணவர்கள் செல்லாதவாறுகண் காணிக்க வேண்டும். உணவு இடைவேளை மற்றும் பள்ளியை விட்டு மாலை வீடு திரும்பும் போது அருகே உள்ள நீர்த்தேக்கங்கள், திறந்த வெளி கிணறுகளுக்கு செல்வதால் ஏற்படும் ஆபத்து குறித்தும், இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்து குறித்தும் காலை இறைவணக்கத்தின்போது மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் இருந்தால் உடனே அகற்ற வேண்டும்.

ஆபத்தான நிலையில் உள்ள உயர் மின்அழுத்த மின்கம்பங்கள், அறுந்து தொங்கும் மின்கம்பிகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். மின்இணைப்புகள் சரியாக உள்ளதா, மின்கசிவு, மின்சுற்று கோளாறு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். வகுப்பறைகளில் மின்சுவிட்ச்கள் சரியாக உள்ளதா, கட்டிடங்களின் மேற்கூரை உறுதியாக இருக்கிறதா என்று ஆய்வுசெய்ய வேண்டும்.அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

தேவை அடிப்படையில் அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி இணைப்புப் பிரிவுகள் தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள் ளது. கடந்த ஆண்டைவிட மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment