தமிழில் பிரதமர் அலுவலக இணைய சேவை தொடக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, May 29, 2016

தமிழில் பிரதமர் அலுவலக இணைய சேவை தொடக்கம்

தமிழ், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, வங்க மொழி, மராத்தி ஆகிய 6 பிராந்திய மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுடன் தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் பிரதமர் அலுவலக இணையதள சேவையை முக்கிய பிராந்திய மொழிகளிலும் வழங்க அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். அதன்படி தமிழ், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, வங்க மொழி, மராத்தி ஆகிய 6 பிராந்திய மொழிகளின் சேவை நேற்று தொடங்கப்பட்டது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் புதிய சேவைகளை தொடங்கிவைத்தார்.

இதற்கு முன்பு www.pmindia.gov.in என்ற பிரதமர் அலுவலக இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்கள் இடம்பெற்றன. இனிமேல் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் பிரதமர் அலுவலக செய்திகளை அறிந்து கொள்ள முடியும்.

இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ''பிராந்திய மொழி சேவையால் மக்களுடனான எனது உறவு வலுப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலக இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்களின் கருத்துகள், எண்ணங்கள், சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் அலுவலக இணையதளத்தின் தமிழ் சேவை: http://www.pmindia.gov.in

No comments:

Post a Comment