தமிழக தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும் போதே, பிளஸ் 2 பாடங்கள் நடத்தி முடிக்கப்படுகின்றன. பின், பிளஸ் 2வில் மீண்டும், ஒருமுறை நடத்தப்படுகிறது. ஆனால், அரசு பள்ளிகளில், பிளஸ் 2 வகுப்பு துவங்கும் போது மட்டுமே, பிளஸ் 2 பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், அரையாண்டு தேர்வுக்கு முன், அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
அதே நேரம், அரையாண்டு தேர்வுக்கு முன், நவ., 15 முதல், 25க்குள், 'முன் அரையாண்டு தேர்வு' என்ற புதிய தேர்வை நடத்த, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதற்கு, ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. 'அரையாண்டு
தேர்வுக்கு முன், பாடங்களை நடத்தவே நாட்கள் இல்லை; மழைக் காலமும் வருகிறது. இந்நிலையில், இன்னொரு தேர்வு வைத்தால், அதற்கு, 10 நாட்களாகும். அதனால், பாடம் நடத்துவது பாதிக்கப்படும்' என, தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து, பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி இளங்கோ கூறியதாவது: ஏற்கனவே, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், பயிற்சி வகுப்பு நடத்துகின்றனர். அதில் பங்கேற்பதால், ஐந்து நாட்கள் பாடம் நடத்த முடிவதில்லை. பண்டிகை விடுமுறைகள் வருகின்றன;
அதை ஈடுகட்டவே திணறும் சூழலில், முன் அரையாண்டுதேர்வு நடத்தினால், உரிய காலத்தில் பாடங்களை முடிக்கஇயலாது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment