400 மொழிகள் அறிந்த இஸ்ரேலில் பயிலும்  10 வயது மாணவர் பயற்சி அளித்தல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 19, 2016

400 மொழிகள் அறிந்த இஸ்ரேலில் பயிலும்  10 வயது மாணவர் பயற்சி அளித்தல்

400 மொழிகள் அறிந்த இஸ்ரேலில் பயிலும்  10 வயது மாணவர் பயற்சி அளித்தல்
குழந்தைகளின் புத்தி கூர்மையை மேம்படுத்துவது எப்படி ?
மொழி வல்லுனராகி அனைவருக்கும் அனைத்து மொழிகளையும் கற்று தரவேண்டும் என்பதே எனது குறிக்கோள் என பத்து வயது
மாணவர் பேச்சு  
400 மொழிகள் அறிந்த இஸ்ரேலில் பயிலும்  10 வயது மாணவர் பயற்சி அளித்தல்

இயற்கை உணர்வு மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் 
கேழ்வரகு ,சாமை,சோளம்,கம்பு,குதிரைவாலி போன்ற இயற்கை உணவை உண்பதால் எந்த நோயும் அண்டவில்லை 
இதுவரை தனது குழந்தைகளுக்குஉடல் நிலை சரியில்லை என மருத்துவமனை சென்றது கிடையாது என தகவல் 
சர்க்கரையை தவிர்த்து , இனிப்புகளையும் தவிர்த்து இளம் வயது வாழ பழகி கொள்ளுங்கள் 
சீதாப் பழம்,கொய்யா பழம்,சப்போட்டா பழம் அதிகம் சாப்பிடுங்கள் என வேண்டுகோள் 
வாழ்க்கைக்கு ஐந்து மொழிகளும்,வாழ்வதற்கு ஆறு மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும் என தகவல் 
கதைகளின் மூலம் மாணவர்களுக்கு அதிகமான பாடங்களை சொல்லி கொடுங்கள் என ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் 
பதினைந்து ஆண்டுகளில் இருபத்தி எட்டு நாடுகள் சுற்றி ஆராய்ட்சி செய்த
உளவியாளரும், பன்மொழி அறிஞருமான மொழிப் பிரியன் பேச்சு

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளின் புத்தி கூர்மையை மேம்படுத்துவது எப்படி ? என்பது தொடர்பான பயிற்சி நடைபெற்றது.
                              பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். நானுறு மொழிகள் அறிந்த இஸ்ரேலில் பயிலும்  பத்து வயது மாணவர் அக்ரம் மாணவர்களிடம் பேசும்போது , இந்திய, வெளிநாட்டு மொழிகளான அரபிக், அச்செனிஸ்,ஆப்ரிக்கன்ஸ், அல் பேனியன்,அமசைக், அம்ஹரிக், ஆர்மீனியன்,அஸென்தெ டிவி, அஸ்ஸாமிஸ்,அஸெர்பைசைனி, பஹஸ பூஹிஸ்,பஹஸ மதுர, பாலினிஸ், பலூச்சி,பவ்லே, பாஷ்கிர், பாஸ்கியூ, பஸ்ஸா,பத்தகீஸ், பெலருஷ்யன்,பெம்ப,பெங்காலி, பெத், பிக்கலோனா,பொஸ்னின், பிராகுய், பல்கேரியன்,பர்மீஸ், கேஸ்டீலியன். கட்டலன்,சிபூவானோ, சென்ட்ரல் குர்தீஷ்,சத்தீஷ்கரி, செஷன், செரோக்கீ,சிச்சோவா, சைனீஷ் ஸிம்லிபைடு,சைனீஷ் ட்ரெடிஷ்னல், சியாவோ,சுவாஷ், கிரிலோ, குரோஷன், செக்,டாக்பனி, டேனிஷ், தரி, திவிஹி,டோக்ரி, டசூன், டச், ஸோங்கா, ஈஸ்ட் இனிக்ட்யுட், எஜிப்ஸியன் ஹைரோகிளிப், இங்கிலீஷ்,இஷ்பெரான்டோ, இஸ்தோனியன், ஈவ்,ஃபேன்தே, ஃபிஜியன், ஃபிலிப்பினோ,ஃபினிஷ், ஃப்ரன்ச், ஃபுளா, கா,களிசியன், ஜோர்ஜன், ஜெர்மன்,கஜரியா, ஜெக், கிரந்த, கிரீக்,குஜராத்தி, ஜிப்ஜி, ஹேஷன் கிரியோ,ஹவ்ஸ, ஹீப்ரு, ஹிந்தி, மாங்க் டவ்,ஹங்கேரியன். ஐஸ்லேனிக், ஈபோ,ஐலோகனோ, இந்தோனிசியன்,இனிக்ட்யுட் ஆர்க்டிக், ஈரானுன், ஐரிஷ்,இட்டாலியன், ஜப்பானிஷ். ஜாவானிஷ்,ஜுலா, கபிலீ, கன்னட, கஷ்மிரீ,கட்டலன், கஸக், கென்யா லுவோ.கெமர், கிக்கம்பா, கிக்காங்கோ,கிக்கியூ, கின்யார்வன்டா, கிளிங்ஆன்,கொரியன், கெப்பல், குர்தீஷ், கட்ச்சி,கிர்கீஷ், லம்பாடி, லவ், லத்தீன்,லத்தீவன், லெப்ச, லிம்பூ, லிங்கள,லிஷு, லித்துனியன், லுகன்டா,மெஸிடோனியன், மலகஸி, மலாய்,மலையாளம், மால்டீஸ், மன்ச்சூ, மந்தர்,மந்தின்க, மணிப்பூரி, மரான்னவ்,மராட்டி, மெந்தி, மங்கோலியன்,நேபாலி, நாக்கோ, நோர்விஜியன்.நிஜிமா, ஒக்சிடன். ஒரியா, உருமூ,ஒஸ்ஸஷன், பஷ்தோ, பெர்சியன்.பொனிசியன், பொலிஷ், போர்ச்சுகீஷ்,புலார், பஞ்சாபி, ரோஹிங்யலிஷ்,ரொமானியன், ருஷ்யன், ஸாமோன்,ஸான்ஸ்கிரிப்ட், ஸரைக்கீ, ஸ்கோட்ஸ்,ஸெர்பியன். ஸெஸத்தோ, ஷோனா.ஸிந்தி, ஸிங்கள, சுலோவக்,சுலோவனியன். ஸோமாலி, ஸ்பானிஷ்,சுன்டாநீஷ், சுராநன், ஸ்வாஹிலி,ஸ்விடீஷ், சிரியக், தகலோக், தஜிக்,தமசைத், தமிழ், தமிழ் பிராமி, தத்தர், டி ரியோ மாயூரி, தெலுகு, டெம்னே, தாய்,திபெத்தியன், டைக்ரின்யா, டோங்கன்,டோஸ்க், துர்கிஷ், துர்க்மென், துவலு,உக்ரனியன். உருது, உய்குர், உஸ்பெக்,வாய், வியட்னாமிஷ், வாலி, வெல்ஷ்,வெஸ்ட் இனிக்ட்யூட், வெஸ்டன் பஞ்சாப், உல்ப், கோஸா, யாவோ,யிதிஷ், யிரோபா, ஸஜக்கி, ஜுலூ போன்ற நானுறு மொழிகளை மூன்று நிமிடத்தில் கூறி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.
                                              நீங்கள் எப்படி இருக்கீங்க? நான் நல்லா இருக்கேன் என்பதை நாற்பது மொழிகளில் பேசி காட்டினார்.மேலும் தேவகோட்டை என்கிற வார்த்தையை நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் எழுதி காண்பித்து மாணவர்களை ஆச்சியரத்தில் ஆழ்த்தினார்.குழந்தைகளின் புத்தி கூர்மையை மேம்படுத்துவது எப்படி ? என்பது தொடர்பாக மூளைக்கு பயிற்சி அளிக்கும்  இருபத்தைந்து பயிற்சி முறைகளை செய்து காண்பித்தார்.இயற்கை  உணவு முறைகளை உண்பதால் தனக்கு எந்த வியாதியும் இது வரை வந்தது கிடையாது  என்றும் ,இது வரை தான் மருத்துவமனைக்கு சென்றது கிடையாது என்றும் தெரிவித்தார்.தற்போது தான் இஸ்ரேல் நாட்டில் படிப்பதாகவும் தெரிவித்தார். மொழி வல்லுனராகி அனைவருக்கும் அனைத்து மொழிகளையும் கற்று தரவேண்டும் என்பதே எனது குறிக்கோள் என்றும் தெரிவித்தார்.இதனை பார்த்து அனைத்து மாணவர்களும் ஆச்சியரத்தில் ஆழந்து போனார்கள்.தாங்களும்இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும் ஆசைபடுவதாக தெரிவித்தார்கள்.
                             
                              உளவியாளரும், பன்மொழி அறிஞருமான மொழிப் பிரியன் பேசுகையில் இயற்கை உணர்வு மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் .கேழ்வரகு ,சாமை,சோளம்,கம்பு,குதிரைவாலி போன்ற இயற்கை உணவை உண்பதால் எந்த நோயும் அண்டவில்லை .இதுவரை தனது குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லை என மருத்துவமனை சென்றது கிடையாது . தடுப்பூசி எதுவும் போடாமல் குழந்தைகள் நன்றாக உள்ளன. சர்க்கரையை தவிர்த்து , இனிப்புகளையும் தவிர்த்து இளம் வயது வாழ பழகி கொள்ளுங்கள் .சீதாப் பழம்,கொய்யா பழம்,சப்போட்டா பழம் அதிகம் சாப்பிடுங்கள் . வாழ்க்கைக்கு தமிழ் ,அரமைக்,ஹிந்தி,ஸ்பானிஷ்,ஹீப்ரு என  ஐந்து மொழிகளும்,வாழ்வதற்கு ஆங்கிலம்,ஹிந்தி,அரபிக்,ஸ்பானிஷ்,பிரெஞ்சு,சைனீஸ் என ஆறு மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். சைனீஸ் மொழியை தொண்ணுற்று ஐந்து கோடிபேர் பேசுறாங்க.ஆறு மொழிகள் தெரிந்தால் ஏலநூற்றி ஐம்பது கோடி பேருடன் பேசலாம் என்றார். கதைகளின் வழியாக மாணவர்களுக்கு அதிகமான படங்களை சொல்லி கொடுங்கள் என ஆசிரியர்களுக்கும் ,கதைகளை அதிகமாக கேட்க சொல்லி மாணவர்களிடமும் வேண்டுகோள் வைத்து பேசினார்.தான் இது வரை பதினைந்து ஆண்டுகளில் இருபத்தி எட்டு நாடுகள் சுற்றி ஆராய்ட்சி செய்ததன் அடிப்படையில் இதனை சொல்வதாகவும் தெரிவித்தார்.
                               மாணவர்கள் ராஜேஸ்வரி,தனலெட்சுமி,ரஞ்சித்,பரமேஸ்வரி,வித்யா,கார்த்திகா ,சபரி,செந்தில்,விக்னேஷ்,ஜீவா,சாய் புவனேஸ்வரன்,சஞ்சீவ்,சந்தியா,சுருதி,விஜய் ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக ஆசிரியை கலாவல்லி நன்றி கூறினார்.

பட  விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளின் புத்தி கூர்மையை மேம்படுத்துவது எப்படி ? என்பது தொடர்பான பயிற்சி வகுப்பில் நானுறு மொழிகள் அறிந்த இஸ்ரேலில் பயிலும்  பத்து வயது மாணவர் அக்ரம் மூளை வளர்ச்சி அடைவது தொடர்பான பயிற்சி அளித்தார். உடன்பதினைந்து ஆண்டுகளில் இருபத்தி எட்டு நாடுகள் சுற்றி ஆராய்ட்சி செய்த உளவியாளரும், பன்மொழி அறிஞருமான மொழிப் பிரியன்,பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் உள்ளனர்.

No comments:

Post a Comment