வாக்களிப்பதை கட்டாயமாக்குவது நடைமுறையில் சாத்தியம் இல்லை: தேர்தல் ஆணையர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 19, 2016

வாக்களிப்பதை கட்டாயமாக்குவது நடைமுறையில் சாத்தியம் இல்லை: தேர்தல் ஆணையர்

வாக்களிப்பதை  கட்டாயம் ஆக்க வேண்டும் என்ற ஆலோசனை நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார். 

வாக்காளர் விழிப்புணர்வு சர்வதேச மாநாட்டில் பேசிய தலைமைத்தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியதாவது:- “  பரவலாக சில நாடுகளில் கடைபிடிக்கப்படும் கட்டாய வாக்களிப்பு முறை  குறித்து ஏற்கனவே விவாதம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை நடமுறையில் சாத்தியம் இல்லை. இருப்பினும் இது குறித்த கருத்தை அறிய நாங்கள் விரும்புகிறோம்” என்றார். 

பின்னர் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி நஜீம் ஜைதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த நஜீம் ஜைதி, “  அரசியல் கட்சிகள் ஒருமனதாக முடிவு எடுத்து அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வந்து, புதிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்குதல் போன்ற தேர்தல் ஆணையத்தின் சில கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டால்தான் இது சாத்தியம் என்று  பாராளுமன்ற நிலைக்குழுவிடமும் சட்ட அமைச்சகத்திடமும் தேர்தல் ஆணையம் தெரிவிள்ளது என்று கூறினார். 

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம்  பராளுமன்றத்தில் வாக்களிப்பதை கட்டாயமாக்கும் தனிநபர் மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா மீது பேசிய அப்போதைய  சட்ட மந்திரி சதானந்த கவுடா, உறுப்பினர்களின் நோக்கத்தை பாராட்டுவதாகவும், அதேவேளையில் கட்டாயமாக வாக்களிக்கும் முறையை அரசு கொண்டு வருவதும் அபராதம் விதிப்பதும் சாத்தியமில்லாத ஒன்று என தெரிவித்தார்.  

கடந்த மார்ச் மாதம் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து மத்திய சட்ட ஆணையம்  தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதிலும், வாக்களிப்பதை கட்டாயமாக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment