ஊராட்சித் துணைத் தலைவர் தேர்வு முறையில் மாற்றம் அரசிதழில் வெளியீடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, October 2, 2016

ஊராட்சித் துணைத் தலைவர் தேர்வு முறையில் மாற்றம் அரசிதழில் வெளியீடு


ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தல் விதிமுறையில் சில திருத்தங்களை செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் நவ., 2 ல் நடக்கிறது. 1995ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (தேர்தல்) விதி 94 ல் ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் நடத்தும் அலுவலர், வார்டு உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி தேர்தலை நடத்த வேண்டும்.

இதில் கூட்டத்தை நடத்துவதற்கான குறைவெண் வரம்பு (கோரம்), ஊராட்சித் தலைவரை வாக்காளராக சேர்ப்பது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

இதனால் கடந்த கால தேர்தல்களில் குழப்பம் ஏற்பட்டது. தற்போது ஊராட்சித் துணைத் தலைவர் தேர்வு முறையில் சில திருத்தங்களை செய்து மாநில அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 'துணைத் தலைவர் தேர்தலுக்கான கூட்டம் நடத்துவதற்கு தேவையான குறைவெண் வரம்பு கணக்கிடுவதற்கு, ஊராட்சித் தலைவரை கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது; மொத்த வார்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வருகை புரிந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.

மேலும் ஓட்டெடுப்பிற்கு வாக்காளர்களாக வார்டு உறுப்பினர்களுடன், ஊராட்சித் தலைவரையும் சேர்த்து கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment