தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு விதிமுறைகளை அதிகாரிகள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிவகாசி குடோனில் பட்டாசு வெடித்து 8 பேர் பலியானது குறித்த பொதுநலன் வழக்கை உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து நேற்று விசாரணை செய்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
சிவகாசி பகுதியில் அடிக்கடி பட்டாசு விபத்துகள் நடைபெற்ற போதிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளாமல் உள்ளனர். இதனால் பட்டாசு ஆலைகளுக்கு வேலைக்குச் செல்லும் அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். அதி காரிகள் ஏசியில் அமர்ந்திருக்கக் கூடாது. மக்களின் இருப்பிடம் நோக்கிச் செல்ல வேண்டும். மக்க ளுடன் மக்களாக வாழ வேண்டும்.
மக்களின் பணம்தான் தங்க ளுக்குச் சம்பளமாக வழங்கப்படு கிறது என்பதை அதிகாரிகள் உணர வேண்டும். மக்களின் சுதந்திரம், பாதுகாப்பை உறுதி செய்வது நீதித் துறையின் கடமை. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு யார் பொறுப்பு. அவர்களின் குடும் பத்துக்கு யார் பதில் சொல்வார்கள் என்றனர்.
பின்னர், தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விதிமுறைகளை அனைத்து ஆட்சியர்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். இதில் தவறும் அதிகாரிகள் தொடர்பாக புகார் வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
விசாரணையின்போது, பட்டாசு உரிமத்தின் நகல் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த உரிமத்தில் சீன பட்டாசு விற்கலாம் என கூறப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், இந்தியாவில் சீன பட்டாசு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கும்போது, சீன பட்டாசு விற்க உரிமம் வழங்கியது எப்படி? என கேட்டனர்.
அதற்கு, அது சீன பட்டாசு அல்ல, அது ஒரு கம்பெனி தயாரிக்கும் பட்டாசின் பெயர் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதையேற்க நீதி பதிகள் மறுத்தனர். பின்னர் விசா ரணையை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment