ரூ.1,000 மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை: மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, February 7, 2018

ரூ.1,000 மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை: மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

ரூ.1,000 மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை: மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தில் மாற்றமில்லை என்று
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாநகர போக்குவரத்துக் கழகத்தில் வழங்கப்படும் மாதம் முழுவதும் விருப்பம்போல் பயணம் செய்யும் சலுகை அட்டை, எவ்வித கட்டண உயர்வும் இல்லாமல் தொடர்ந்து 1,000 ரூபாய்க்கே வழங்கப்படும்.
மேலும், பயணிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர சலுகை அட்டை, புதிய கட்டண விகிதத்தில் கூடுதல் சலுகையுடன் வழங்கப்படும். உதாரணமாக, பழைய கட்டணத்தில் ரூ.240-க்கு வழங்கப்பட்ட மாதாந்திர சலுகை பயண அட்டை ரூ.320-க்கும், ரூ.280-க்கு வழங்கப்பட்ட மாதாந்திர சலுகை பயண அட்டை ரூ.370-க்கும் சலுகை விலையில் வழங்கப்படும்.
பிற போக்குவரத்துக் கழகங்களில் மாதாந்திர சலுகை அட்டை திட்டத்தில் 20 நாட்களுக்கான கட்டணத்தை செலுத்தி மாதம் முழுவதும் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் எவ்வித கட்டண உயர்வும் இல்லாமல் தொடர்ந்து வழங்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
x

No comments:

Post a Comment