மத்திய பட்ஜெட் 2018: 50 முக்கிய அம்சங்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, February 1, 2018

மத்திய பட்ஜெட் 2018: 50 முக்கிய அம்சங்கள்

மத்திய பட்ஜெட் 2018: 50 முக்கிய அம்சங்கள்
2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பட்ஜெட்டின் 50 முக்கிய அம்சங்கள்:
1. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக அந்நிய முதலீடு கணிசமாக உயர்ந்துள்ளது.
2. விவசாயிகளின் வருவாய்க்கு உயர்த்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
3. இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்படும்.
4. நடப்பு நிதிநிலை ஆண்டில் இரண்டாவது அரையாண்டில் வளர்ச்சி விகிதம் 7.2- 7.5 சதவீதத்தை எட்டும்.
5. அரசியல் லாபத்தைக் கருத்தில் கொள்ளாமல் சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.
6. வேளாண்மை உற்பத்தி முன்பு எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது.
7. அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு.
8. வரி ஏய்ப்பு குறைந்துள்ளது.
9. அரசு கொள்கை முடிவு எடுப்பதில் இருந்த தேக்க நிலையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். -அருண் ஜேட்லி
10. பிரதமர் கிராம சாலை திட்டம் வேளாண் மையங்களை இணைக்கும்
11. வேளாண் கட்டமைப்பு வசதிகளுக்கு 22000 கோடி ஒதுக்கீடு
12. இயற்கை வேளாண்மையை பெருமளவில் ஊக்குவிக்க நடவடிக்கை
13. இந்தியாவின் பொருளாதாரம் 2.5 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
14. விவசாயிகள் கடன் அட்டைத்திட்டம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறைக்கும் விரிவாக்கம்
15. சேவைகள் மக்களின் இல்லத்திற்கே கொண்டு செல்லப்படுகின்றன. அல்லது அவரது வங்கிகளை அடைகின்றன.
16. வேளாண் ஏற்றுமதிக் கொள்கை எளிதாக்கப்பட்டுள்ளது.
17. உணவு பதப்படுத்துதல் துறைக்கான ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
18. வேளாண் ஏற்றுமதி 100 பில்லியன் டாலர் அளவை எட்ட வாய்ப்பு.
19. 42 வேளாண் பூங்காக்கள் அமைக்கப்படும் -நிதி அமைச்சர்
20. மீன் மற்றும் இறால் வளத்துறைக்கு 1,000 கோடி  ரூபாய் ஒதுக்கீடு.
21. கிராமப்புறங்களைச் சேர்ந்த 8 கோடி மகளிருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
22. டெல்லியில் மாசுக் கட்டுப்பாட்டை உறுதி செய்ய நடவடிக்கை.
23. அடுத்த நிதி ஆண்டிற்குள் கூடுதலாக 2 கோடி கழிப்பறைகள் கட்டப்படும்.
24. 2020-ல் அனைவருக்கும் வீடு. கட்டுப்படியாகக்கூடிய வீட்டு வசதிக்கென பிரத்யேக நிதி.
25. 2022-க்குள் அனைவருக்கும் வீடு.
26. ஊரக சாலைத்திட்டத்தின் கீழ் 3 கோடியே 21 லட்சம் ஊரக வேலை வாய்ப்பு.
27. ஆசிரியர் பயிற்சியில் ஒருங்கிணைந்த பி.எட் பயிற்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
28. பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சித் தர புதிய திட்டம். ஒருங்கிணைந்த பி.எட். திட்டம் அறிமுகம்.
29. கல்வித்துறைக்கு ரூ 1 லட்சம் கோடி முதலீடு. நவோதையா பள்ளிகள் அடிப்படையில் புதிய ஏகலைவன் பள்ளிகள்.
30. நேர்மையான ஊழலற்ற அரசை வழங்க உறுதி.
31. ஊரகப் பகுதிக்கு கூடுதல் நிதி வழங்க முடிவு.
32. வளர்ச்சிப் பாதையில் உற்பத்தித் துறை.
33. வேளாண், கல்வி, ஊரகத்துறை, சுகாதாரம் ஆகியவற்றிற்கு கூடுதல் முக்கியத்துவம்.
34. சுகாதார இந்தியாவை உருவாக்க ஆயுஷ்மான் இந்தியா திட்டம்.
35. அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்து.
36. 3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி வீதம் ஏற்படுத்தப்படும்.
37. 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.
38. ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீடு 50 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு.
39. சமூக நலத்திட்டங்கள், சுகாதாரம் மற்றும் கல்விக்கு 1.35 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு .
40. கங்கையை தூய்மைப்படுத்த 187 புதிய திட்டங்கள் .
41. முத்ரா கடன் திட்டத்திற்கு ரூ 3லட்சம் கோடி.
42. மாற்றுத்திறனாளிகளுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத்திட்டம்.
43. ஷெட்யூல்டு வகுப்பினர் நலனுக்காக ரூ 56919 கோடி ஒதுக்கீடு.
44. காசநோயாளிகள் நலனுக்காக ரூ 600 கோடி ஒதுக்கீடு -நிதி அமைச்சர்
45. வேலைவாய்ப்பை பெருக்குவதே அரசு கொள்கைத் திட்டங்களின் மையம் ஆகும் .
46. ஸ்மார்ட் மற்றும் அம்ரூத் நகரங்களுக்கு ரூ 2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு
47. நாட்டின் 10 பிரபலமான சுற்றுலாத் தலங்கள் நாட்டின் அடையாளமாக உயர்த்தப்படும் .
48. கட்டமைப்புத் துறையில் ரூ 50 லட்சம் கோடி முதலீடு செய்ய பரிசீலனை
49. 9000 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையை நடப்பு நிதி ஆண்டிலேயே அமைத்து முடிக்கத் திட்டம்.
50. 4000 கி.மீ. ரெயில்வே பாதைகள் மின் மயமாக்கப்படும்.

No comments:

Post a Comment