கல்வி அதிகாரிகள் 32 பேருக்கு, 'ஜீப்' - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, February 3, 2018

கல்வி அதிகாரிகள் 32 பேருக்கு, 'ஜீப்'

மாவட்டக் கல்வி அலுவலர்களின், கள ஆய்வுப் பணிக்காக, 1.92 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட, 32 புதிய ஜீப்புகளை, முதல்வர் பழனிசாமி, நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளிகளை அடிக்கடி ஆய்வு செய்யவும், கல்வித் தரத்தை கண்காணிக்கவும், நிர்வாகப் பணிகளை, விரைவாக மேற்கொள்ளவும், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்காக, 1.92 கோடி ரூபாய் செலவில், 32 புதிய ஜீப்புகள் வாங்கப்பட்டன. 

அவற்றை, முதல்வர் பழனிசாமி, நேற்று தலைமைச் செயலகத்தில், கொடியசைத்து துவக்கி வைத்தார். பொது நுாலகத் துறையில் பணியாற்றி, பணியின்போது இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள், 20 பேருக்கு, கருணை அடிப்படையில், பல்வேறு பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான பணி நியமன ஆணையை, முதல்வர் பழனிசாமி, நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment