கல்வி செஸ் வரி 4 சதவீதமாக உயர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, February 3, 2018

கல்வி செஸ் வரி 4 சதவீதமாக உயர்வு

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக வருமான வரி செலுத்துவோரிடம் 3 சதவீத செஸ் வரி வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த செஸ் வரி தற்போது 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய செஸ் வரிக்கு ‘சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் வரி’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் வரி வருவாயில் 11,000 கோடி கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், செஸ் வரி 1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது வருமான வரி செலுத்துவோருக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment