தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் பிஎட் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு முறை ரத்து - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, February 8, 2018

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் பிஎட் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு முறை ரத்து

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வியில் பி.எட். படிப்பை வழங்கி வருகிறது. இதில் தமிழ் வழி படிப்புக்கு 500 இடங்களும், ஆங்கில வழிக்கு 500 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இடைநிலை ஆசிரியர் பயிற்சியுடன் பட்டப் படிப்பு முடித்துவிட்டு, அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவோர் இந்த 2 ஆண்டு கால தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேரலாம். (தற்போது ரெகுலர் பி.எட். படிப்புக்கான காலமும் 2 ஆண்டுகள் ஆகும்). கடந்த ஆண்டு வரைதொலைதூரக் கல்வியில் பிஎட். படிப்புக்கு நுழைவுத்தேர்வு மூலமாக மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.இந்நிலையில், இந்த ஆண்டு நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதில் பட்டப் படிப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க அப்பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.
மேலும், முதுகலை பட்டம் பெற்றிருந்தால் (இளங்கலை பட்டப்படிப்பை அடிப்படை கல்வித் தகுதியாக கொண்ட பிஎட் படிப்பு) கூடுதலாக 3 மதிப்பெண், எம்பில் பட்டதாரியாக இருந்தால் 5 மதிப்பெண், பிஎச்டி முடித்திருந்தால் 6 மதிப்பெண் வழங்கப்படும். பிஎட் படிப்பில் சேர பிப்ரவரி 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment