ஆதார் இல்லாவிட்டாலும் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய
அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அறிவிப்பு.
ரேஷன் கடைகளில் ஆதார் எண் இணைக்காத கார்டுகள் நீக்கப்பட மாட்டாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்ததற்கு மாறாக, பலரது குடும்ப அட்டைகள் செல்லாது என்று ரேஷன் கடை ஊழியர்கள் மேலிடத்தை காரணம் காட்டி தெரிவித்துள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஆதார் இல்லாவிட்டாலும் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் இல்லை என்பதற்காக மாநில அரசுகள் ரேஷன் பொருட்களை வழங்க மறுக்கக் கூடாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
No comments:
Post a Comment