ஆங்கிலத்திலும் இனி தமிழ்நாடு! தமிழக அரசு ஏற்பாடு
தமிழில் உள்ளதைப் போலவே ஆங்கிலத்திலும் 'தமிழ்நாடு' என பெயர் மாற்றும் வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள், ஆங்கிலத்தில், வேறு மாதிரியாக உள்ளன. அவற்றை தமிழில் உள்ளதைப் போலவே மாற்ற வேண்டும் என தமிழறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி மாவட்ட நிர்வாகம், வருவாய், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ், ஆங்கில அறிஞர்கள் அடங்கிய குழு,மாற்று ஓசையுடன் உள்ள ஊர் பெயர்களை ஆராய்ந்தது. பின், அதற்குச் சமமான, ஆங்கில எழுத்து மற்றும் உச்சரிப்புடன் கூடிய பெயர்களை உருவாக்கியது. இதுவரை, மதுரை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட, 18 மாவட்ட கலெக்டர்கள், மாற்றப்பட உள்ள ஊர்ப் பெயர் பட்டியலை தமிழ் வளர்ச்சித் துறைக்கு அனுப்பி உள்ளனர்.
அதுகுறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று முன்தினம், சென்னை, தலைமைச் செயலகத்தில் நடந்தது. அதில் தமிழ் வளர்ச்சி நில அளவை பதிவேடுகள், வருவாய் நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.அதில் 'தமிழ்நாடு' என்பதை ஆங்கிலத்திலும் 'THAMIZH NADU' என மாற்றும் வகையில், இந்த மாதத்திற்குள் அரசாணை வெளியிட, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment