ஆசிரியாரை வேறு பள்ளிக்கு மாற்றக்கூடாது என மாணவர்கள் கண்ணீர்: திருப்பூர் வெள்ளியங்காடு பள்ளியில் நெகிழ்ச்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, February 5, 2019

ஆசிரியாரை வேறு பள்ளிக்கு மாற்றக்கூடாது என மாணவர்கள் கண்ணீர்: திருப்பூர் வெள்ளியங்காடு பள்ளியில் நெகிழ்ச்சி

ஆசிரியாரை வேறு பள்ளிக்கு மாற்றக்கூடாது என மாணவர்கள் கண்ணீர்: திருப்பூர் வெள்ளியங்காடு பள்ளியில் நெகிழ்ச்சி

திருப்பூர் அருகே ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றக்கூடாது என்று கூறி, அவரை பள்ளி மாணவர்கள் சூழ்ந்து கொண்டு கண்ணீர் விட்டு அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியங்காடு அரசு நடுநிலை பள்ளியில் 8-ம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்த சுரேஷை வேறு பள்ளிக்கு மாற்றுவதை எதிர்த்து தான் மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அதேபோல ஆசிரியர் சுரேஷும் திருச்சி பாளையம் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

இதற்கான உத்தரவு நகலை பெற பள்ளிக்கு வந்தபோது அவரை மாணவர்கள் சூழ்ந்து கொண்டு வேறு பள்ளிக்கு செல்லவிடாமல் தடுத்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த பெற்றோர்களும், மாணவர்கள் மீது வைத்திருக்கும் பாசத்தை பார்த்து ஆசிரியர் சுரேஷை பணிமாறுதல் செய்யக்கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதே போல கடந்த ஆண்டு திருவள்ளூரில் பள்ளியை விட்டு ஆசிரியர் பகவான் செல்லகூடாது என்று மாணவர்கள் கதறி அழுதது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment