வருகிற 2020-ம் ஆண்டு இந்தியர்களின் ஊதிய உயர்வு 9.2 சதவிகிதமாக அதிகரித்திருக்கும் என ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
Korn Ferry Global Salary Forecast என்னும் நிறுவனம் ஆசிய நாடுகளின் பணவீக்கம், வாங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஊதிய உயர்வு எப்படி இருக்கும் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில்தான் ஆசியாவிலேயேவருகிற 2020-ம் ஆண்டு அதிக ஊதியம் பெறும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை மேற்கொண்ட நிறுவனத்தின் இந்தியத் தலைவர் நவ்னீத் சிங் கூறுகையில், 'சர்வதேச நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியா சிறந்த வளர்ச்சியைப் பெற்று வருகிறது.
இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவின் ஊதிய உயர்வு ஆசிய நாடுகளிலேயே அதிகமானதாக இருக்கும்' என்றுள்ளார்.2020-ல் சர்வதேச அளவில் இந்த ஊதிய உயர்வு விகிதம் என்பது 4.9 சதவிகிதமாக இருக்கும். இந்தியாவுக்கு அடுத்தபடியாக இந்தோனேஷியா 8.1 சதவிகித ஊதிய உயர்வு பெற்று இருக்கும். மலேசியா, சீனா மற்றும் கொரியா ஆகிய நாடுகளின் ஊதிய வளர்ச்சி 2020-ல் முறையே 5%, 6% மற்றும் 4.1 சதவிகிதமாக உயர்ந்திருக்கும்.
இந்த ஆய்வு சுமார் 130 நாடுகளைச் சேர்ந்த 25 ஆயிரம் நிறுவனங்களில் சுமார் 20 மில்லியன் ஊழியர்களிடம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment