முன்னேற்பாடுகள் முடிந்த பிறகே 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு- கவர்னர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, October 9, 2021

முன்னேற்பாடுகள் முடிந்த பிறகே 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு- கவர்னர்

முன்னேற்பாடுகள் முடிந்த பிறகே 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு- கவர்னர் 

        தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் கொசுக்களால் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு இருக்கிறது. சில குழந்தைகள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்க மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தேன். 

        டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளைப் பார்த்தேன். அவர்கள் நலமடைந்து வருகிறார்கள். டெங்கு பாதித்த குழந்தைகளுக்காக 6 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தேவைப்பட்டால் இன்னும் அதிகரிக்கப்படும். அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. 
         புதுச்சேரி முழுவதும் கொசு உற்பத்தியைத் தடுக்க பொதுப்பணி, சுகாதாரம் மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் இணைந்து பணி செய்து வருகின்றனர். குப்பைகள் தேங்கவிடாமல் அகற்றப்பட்டு வருகிறது. அதனையும் கண்காணித்து வருகிறேன். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளது. 
                 மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் டெங்கு பரவுவதைத் தடுக்க முடியும். பொதுமக்கள் அனைவரும் தயக்கம் இல்லாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். இன்னும் 3 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட வேண்டியுள்ளது. அப்போது நாம் 100 சதவீதம் இலக்கை அடைய முடியும். 
             புதுச்சேரியில் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தை பின்பற்றி தான் நாம் பள்ளிகள் திறக்க முடியும். இருப்பினும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியாக முன் தயாரிப்பு உள்ளது. அந்த முன்னேற்பாடுகள் முடிந்த பிறகு தான் புதுவையில் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment