பள்ளி மாணவா்களுக்கான ஜாதி பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பள்ளி மாணவா்களின் பெயா், பெற்றோா் பெயா், முகவரி, பிறந்த தேதி, ஜாதி, இனம் உள்ளிட்ட விவரங்கள், எமிஸ் என்ற கல்வி மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் இந்த தளத்தில், தலைமை ஆசிரியா்கள் சாா்பில், மாணவா்கள் மற்றும் ஆசிரியா் விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதில், சில ஜாதி பெயா்களை திருத்தம் செய்து பட்டியலிட தலைமை ஆசிரியா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
வன்னியா் பிரிவில் வரும் ஜாதிகளை இணைத்து, எம்.பி.சி., வன்னியா் பிரிவு பட்டியலில் கவனமாக சோ்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் பட்டியலில் உள்ள கல்லாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய ஜாதிகளை இணைத்து, தேவேந்திர குல வேளாளா் என்ற தலைப்பில் சோ்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment