நவ.1 முதல் பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய வகுப்பு வாரியான கற்பித்தல் திட்டம் - தொ.க இயக்குநர் சுற்றறிக்கை. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, October 31, 2021

நவ.1 முதல் பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய வகுப்பு வாரியான கற்பித்தல் திட்டம் - தொ.க இயக்குநர் சுற்றறிக்கை.

நவ.1 முதல் பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய வகுப்பு வாரியான கற்பித்தல் திட்டம் - தொ.க இயக்குநர் சுற்றறிக்கை. 

                கொரோனா பெருந்தொற்று கால நீண்ட இடைவெளிக்குப்பின்  திங்கள் கிழமை (2021 நவம்பர் 1) முதல்  தொடங்கவுள்ள I - VIII வகுப்புகளுக்கான கற்பித்தல் திட்டம் குறித்து தொடக்கக் கல்வி  இயக்குநர் சுற்றறிக்கை (எண்:2 நாள்:30.10.2021) வெளியிட்டுள்ளார். அதன்படி, 

 ☝🏽 முதல் 10 - 15 நாள்களுக்கு கதை, பாட்டு, விளையாட்டு, வரைதல் உள்ளிட்ட மனமகிழ்ச்சிச் செயல்பாடுகளும், 

 ✌🏽 45 - 50-ஆம் நாள் வரை விடுப்புகால கற்றல் இழப்புகளை ஈடுசெய்யும் புத்தாக்கப் பயிற்சிகளும், 

 👍🏽 அதன்பின்னரே முதன்மைப்படுத்தப்பட்ட (அரசு தேர்வு செய்துள்ள பாடப்பகுதி மட்டும் அடங்கிய) பாடத்திட்டத்தைக் கற்பிக்க வேண்டும். இம்மூன்று படிநிலைகளுக்கான வழிகாட்டல்கள் & கட்டகங்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை வகுப்பு வாரியாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் தொடக்கக் கல்வி இயக்குநர் தனது சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். 

அதன்படி, வகுப்பு - I: 

 ☝🏽 முதல் 10 - 15 நாள்களுக்கு மனமகிழ்ச்சிச் செயல்பாடுகள்.

 👍🏽 இதனை நிறைவு செய்த பின்னர் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம். 

 வகுப்புகள் II - V: 

 ☝🏽 முதல் 10 - 15 நாள்களுக்கு மனமகிழ்ச்சிச் செயல்பாடுகள். 

 ✌🏽 45 - 50-ஆம் நாள் வரை புத்தாக்கப் பயிற்சிகள். 

 👍🏽 இவ்விரண்டையும் நிறைவு செய்த பின்னர் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம். வகுப்புகள் VI - VIII: 

 ☝🏽 முதல் 10 - 15 நாள்களுக்கு மனமகிழ்ச்சிச் செயல்பாடுகள். 

 ✌🏽 வகுப்பிற்கேற்ற கற்றல் அடைவை மாணவர் பெற்றிருப்பின் ஆசிரியரே ஒரு கால அளவை நிர்ணயித்து, அக்காலத்தில் புத்தாக்கப் பயிற்சிகளை மீள்பார்வையாக (Recall) பயன்படுத்திக் கொள்ளலாம். 

 👍🏽 அதன் பின் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தைக் கற்பிக்கலாம். 


 *ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருந்த திங்கள்  திங்களன்று முழுமையாகிறது! உங்களின் வழக்கமான செயல்திறத்தால் நமது மாணவச் செல்வங்கள் பெருந்தொற்றுகால இழப்புகளில் இருந்து மீண்டு பயன்பெற வாழ்த்துகள்.

No comments:

Post a Comment