ஊரக உள்ளாட்சி தேர்தல் - வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க 11 ஆவணங்கள்
மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.
பூத் சிலிப் எனப்படும் ஓட்டுச்சாவடி சீட்டு வைத்திருப்போரும், இல்லாதவர்களும் வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்து வாக்களிக்கலாம்.
அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை திட்ட அட்டை, வங்கி அல்லது தபால் அலுவலக கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத்தின் மருத்துவக் காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட். ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன அடையாள அட்டை, எம்.பி., எம்.எல்.ஏ., அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment