பள்ளிகள் திறப்பு - குடும்பத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் விபரம், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப ஒப்புதல் தெரிவித்தல் படிவம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, October 10, 2021

பள்ளிகள் திறப்பு - குடும்பத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் விபரம், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப ஒப்புதல் தெரிவித்தல் படிவம்.

பள்ளிகள் திறப்பு - குடும்பத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் விபரம், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப ஒப்புதல் தெரிவித்தல் படிவம். 

    01.11.2021 முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவர்களது குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டார்களா? எத்தனை டோஸ் எடுத்துக்கொண்டனர்? என்ற விபரத்தையும், பள்ளி திறப்பு அன்று பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப ஒப்புதல் தெரிவித்துள்ளார்களா? என்ற விபரத்தையும் பதிவு செய்வதற்கான படிவம். 

    நமது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். பொற்றோர் ஒப்புதல் : 01.11.2021 ( திங்கட்கிழமை ) அன்று பள்ளி மீண்டும் திறக்கப்படும்போது என் மகன் / மகள் பள்ளிக்கு அனுப்ப நான் முழு விருப்பத்துடன் ஒப்புதல் அளிக்கிறேன். என் மகன் / மகள் நலமாக இருக்கிறான் / ள். நான் கோவிட் -19 தொற்றுநோயைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கிறேன். 

         மேலும் எனது மகனை / மகளை பள்ளிக்கு அனுப்பும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் எனக்கு முழுமையாக தெரியும். எனது குடும்பத்தில் உள்ளவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளோம் / இல்லை. மேலும் கோவிட் -19 தொற்றுநோய் குறித்து பள்ளித் தலைமையாசிரியர் வழங்கிய அனைத்து வழிமுறைகளையும் நான் முழுமையாகப் பின்பற்றுவேன் என அந்த படிவத்தில் பெற்றோர்களை நன்றாக படித்து பார்க்க சொல்லி, படிக்க தெரியாதவர்களுக்கு வாசித்து காட்டி அவர்களது கையொப்பத்தை பெற்றுக்கொள்ளவும். 

 பெற்றோர் ஒப்புதல் கடிதம் : Parents Willing Letter - Download here...

No comments:

Post a Comment