9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் மாநில அளவிலான மதிப்பீட்டு தேர்வு நடத்துவது குறித்த பள்ளி இயக்குனரின் செயல்முறைகள்
9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி பாடத்திட்டத்தின் கீழ் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் மாநில அளவிலான மதிப்பீட்டு தேர்வு நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
Covid - 19 காரணமாக பெருந்தொற்று மாநில அளவில் பரவியுள்ள நிலையில் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைத்தல் சார்ந்து , மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும் புத்தாக்கப் பயிற்சி கட்டகம் தயாரிக்கப்பட்டு பள்ளியில் நடைமுறையில் உள்ளது.
முதல் கட்டமாக புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கும் . 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , இயற்பியல் , வேதியியல் , தாவரவியல் , உயிரி தாவரவியல் , விலங்கியல் , உயிரி விலங்கியல் , வரலாறு , பொருளியல் , கணக்குப்பதிவியல் , வணிகவியல் , கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் ஆகிய பாடங்களுக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் பாட வாரியாக 60 கொள்குறி மதிப்பீட்டு வினாக்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.
இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி 9 முதல் 12 - ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்தொழில் நுட்ப ஆய்வகம் ( HighTech Lab ) மூலம் மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது .
அதன்படி அனைத்து தலைமை ஆசிரியர்களும் இந்த மதிப்பீட்டை 12.10.2021 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் உயர்தொழில் நுட்ப ஆய்வகத்திலுள்ள ( Hitech lab ) கணினிகளின் எண்ணிக்கைக்கேற்ப ஒவ்வொரு குழுவினருக்கும் மாணவர் EMIS LOG IN மற்றும் PASSWORD ஆகியவற்றை பயன்படுத்தி ஒரு மணி நேரம் கால அவகாசம் அளித்து நடத்திட வேண்டும் .
மேலும் , இச்செயல்பாட்டினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணித்திட அறிவுறுத்தப்படுகிறது . மேலும் ஒவ்வொரு குழு மாணவர்களுக்கான மதிப்பீடு முடிந்த பின்னர் உடனுக்குடன் அடுத்தடுத்த குழு மாணவர்களை அமரவைத்து அனைத்து மாணவர்களும் இணைப்பிலுள்ள அட்டவணையின்படி அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களும் செயல்படவும் , ஆசிரியர்கள் இணையதள வசதி உள்ள கணினிகளைப் பயன்படுத்தியும் இம்மதிப்பீட்டுச் செயலை சிறப்பாக நடத்தி முடித்தல் சார்ந்து உரிய அறிவுரைகளை அனைத்து அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் .
No comments:
Post a Comment