சென்னை: சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., கல்லூரி மைதானத்தில், வரும் 9ம் தேதி மாலை 6:00 மணிக்கு 38வது சென்னை புத்தக கண்காட்சி துவங்க உள்ளது.
இதை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி, மயில்சாமி அண்ணாதுரை துவக்கி வைக்கிறார். கண்காட்சி, வரும் 21ம் தேதி வரை, 13 நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் 700க்கும் மேற்பட்ட அரங்குகளில், ஐந்து லட்சத்திற்கும் அதிகமான நூல்கள் இடம்பெறுகின்றன. அவற்றில் 30 ஆயிரம் புத்தகங்கள் புதியவை.
வார இறுதி நாட்களில் காலை, 11:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரையும், மற்ற நாட்களில், பிற்பகல் 2:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரையும்
கண்காட்சி நடைபெறும்.
தினமும், கண்காட்சி அரங்கின் பொதுமேடையில் எழுத்தாளர்கள், அறிஞர்கள், படைப்பாளிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும், சொற்பொழிவுகள், விவாதங்கள், கலை நிகழ்ச்சிகள், குறும்பட திரையிடல், விருது வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும்.
நந்தனம் கலைக்கல்லூரியில் வாகனங்களை நிறுத்தும் வசதி, கண்காட்சி மைதானத்தில், குடிநீர், உணவகம், நடமாடும் ஏ.டி.எம்., மைய வசதி, தேர்ந்தெடுத்த புத்தகங்களை வீட்டுக்கு அனுப்பும், கூரியர் வசதி, பணம் இல்லாதோர், புத்தகங்களை வி.பி.பி., மூலம் தேர்ந்தெடுக்கும் வசதி, இணையதளம் மூலம் புத்தகங்களை தேர்ந்தெடுக்கும் வசதிகள் உள்ளன.
சென்னையில் புத்தக கண்காட்சிக்கு என நிரந்தரமாக இடம் ஒதுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment