அரசு பள்ளிகளை, தத்தெடுக்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தனியார் பள்ளிகளைபோல், அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த அரசு தரப்பில் திட்டங்களை செயல்படுத்தினாலும், அதற்கேற்ற கட்டமைப்பு வசதி, பெரும்பாலான பள்ளிகளில் இல்லை. எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், வகுப்பறை, கழிப்பிட வசதி செய்தாலும், ஆண்டுதோறும் அதிகரிக்கும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் வகுப்பறை அவசியமாகிறது. மேலும், சமையல் கூடம், கலையரங்கம், சுற்றுச்சுவர், குடிநீர் தொட்டி, பெஞ்ச், நாற்காலி, மேஜை, மின்விளக்கு மற்றும் மின்விசிறி, விளையாட்டு உபகரணங்கள், கம்ப்யூட்டர்
வசதி, ஆய்வக உபகரணங்கள் உள்ளிட்ட பலவிதமான தேவைகள், அரசு பள்ளிகளில் போதுமானதாக இல்லை.
இன்றைய காலகட்டத்தில், கம்ப்யூட்டர் சார்ந்த அறிவு அவசியமாக மாறி விட்டதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பது மிக முக்கியமாகிறது; பல பள்ளிகளில், கம்ப்யூட்டர் லேப் மற்றும் கம்ப்யூட்டர் வசதி போதிய அளவில் இல்லை. மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, உடற்கல்வி ஆசிரியர்களும் இருப்பதில்லை; விளையாட்டில் ஆர்வம் இருந்தும், சரியான பயிற்சியின்றி பாதிப்படைகின்றனர். முறையாக விளையாட்டு பயிற்சி அளிக்கும் பட்சத்தில், விளையாட்டு கோட்டாவில், பணி வாய்ப்பு பெற முடியும்.
தொழில் அமைப்புகள், அரசு பள்ளி களை தத்தெடுத்தால் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களுக்கு சமுதாயத்துடன் நல்ல ஒருங்கிணைப்பு ஏற்படும். தொழில் அமைப்பு ஆதரவு, பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்,'' என்றார். பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், தொழில் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி, அரசு பள்ளிகளை தத்தெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; தொழில் அமைப்புகள், தங்கள் பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு பள்ளியை தத்தெடுத்து, அதன் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வர வேண்டும்.
முயற்சிக்கலாமே!
No comments:
Post a Comment