முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுத போகும் நண்பர்களே... இதை படிங்க முதலில்... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 7, 2015

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுத போகும் நண்பர்களே... இதை படிங்க முதலில்...

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுத போகும் நண்பர்களே... இதை படிங்க முதலில்...
1. தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் உடனே உங்கள் ஹால் டிக்கெட் எடுத்து வைத்து கொள்ளுங்கள். 
இது கடைசி நேர பரபரப்பு மற்றும் பதட்டத்தை குறைக்கும்.
2. தேர்வுக்கு நீல நிற அல்லது கருப்பு நிற பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
3. தேர்வுக்கு செல்லும் போது இரண்டு பாஸ்போட் சைஸ் போட்டோ எடுத்து செல்லுங்கள்.

4. தேர்வு வினாத்தாளில் எதுவும் குறியிட கூடாது.
5. வினாத்தாள் பெற்ற முதல் ஒரு மணி நேரத்தில் வினாத்தாள் படிப்பது மற்றும் 25 % மதிப்பெண்ணுக்கான விடைகளை முடித்துவிட வேண்டும்.
6. அடுத்த ஒரு மணி நேரத்தில் 50% விடைகளை முடித்து விட்டு, மீதமுள்ள ஒரு மணி நேரத்தில் கடினமான மற்றும் குழப்பமான வினாக்களை யோசித்து உரிய விடைகளை அளிப்பதற்கு செலவிட வேண்டும்.
7. இந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு வெளிப்படையாக நடக்கும் தேர்வு. இதில் எந்தவித ஊழலுக்கும் இடமில்லை என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள். 
8. இந்த முறை ஓஎம்ஆர் தாளில் உங்கள் புகைப்படம் மற்றும் ரிஜிஸ்டர் எண்ணும் பதிவிடப்பட்டு உள்ளது. இது குழப்பத்தை தவிர்க்க ஆசிரியர் தேர்வு வாரியம் எடுத்து வரும் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளுக்கு ஒர் சிறிய உதாரணமாக கூறலாம்.
9. தேர்வுக்கு செல்லும் போது ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்து செல்ல மறந்துவிடாதீர்கள்.
10. செல்போன் கொண்டு செல்வதை தவிருங்கள். 
SOURCE : TNTET & PGTRB

No comments:

Post a Comment