பி.எஸ்.சி.,தொகுதி-I தேர்வில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கு, 74 காலிப் பணியிடங்களுக்கான முதனிலை எழுத்துத் தேர்வு வருகிற நவம்பர் 8ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்பத்தினை தேர்வாணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான விவரத்தினை தேர்வாணைய இணையதளம் www.tnpsc.gov.in மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியிட்டு உள்ளது.
மேலும், சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்தியிருந்தும் அவர்களது விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட விவரம் இணையதளத்தில் இல்லாவிடில், அவ்விண்ணப்பதாரர்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச் சீட்டின் நகலுடன், தொகுதி-I பதவிக்கான விண்ணப்ப பதிவு எண், விண்ணப்ப/தேர்வுக் கட்டணம் (ரூபாய்), மற்றும் கட்டணம் செலுத்திய இடம்: அஞ்சலகம்/இந்தியன் வங்கி வங்கிக்கிளை/ அஞ்சலக முகவரி, ஆகியவற்றை தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com க்கு, அக்டோபர் 13ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
No comments:
Post a Comment