ஆதார் அட்டைக்காக தரும் விவரங்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானது: உச்ச நீதிமன்றம் கேள்வி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, October 6, 2015

ஆதார் அட்டைக்காக தரும் விவரங்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானது: உச்ச நீதிமன்றம் கேள்வி

ஆதார் அட்டைக்காக பொதுமக்களால் தரப்படும் விவரங்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆதார் அட்டை தொடர்பான வழக்கில், பொதுமக்களின் விவரங்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமனறம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று கூறியதால் ஏழைகளுக்கான உணவு தடுக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தனது வாதத்தை முன் வைத்தது.

இதற்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஒருவர் ஏழை என்பதால், தனிநபர் சுதந்திரம் என்பது அவருக்குக் கிடையாதா என்று அரசு வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினர்.

No comments:

Post a Comment