அடுத்த வாரம் விடுமுறை வாரமாக இருப்பதால் ஏடிஎம் மையங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகிறது.
பொதுவாக அடுத்தடுத்து 2 அல்லது 3 நாட்கள் அரசு விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல் முறையாக வரும் வாரத்தில் தொடர்ச்சியாக 5 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. இதனால், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்பட்டிருக்கும்.
வரும் புதன்கிழமை 21ம் தேதி ஆயுத பூஜை, 22ம் தேதி விஜயதசமி, 23ம் தேதி மொகரம் பண்டிகை, அதனை அடுத்து 24ம் தேதி மாதத்தின் இறுதி சனிக்கிழமை எனவே வங்கிகளுக்கு விடுமுறை. 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை.
இப்படி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வந்திருப்பதால், அரசு ஊழியர்கள் பலரும் சுற்றுலாப் பயணம் செல்ல திட்டமிட்டிருப்பார்கள்.
அதே போல, இந்த 5 நாட்களும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதால் ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும். எனவே பொதுமக்களும் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment