குழந்தைகளுக்கான போட்டிகள்: அக்.31-க்குள் விண்ணப்பிக்கலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, October 16, 2015

குழந்தைகளுக்கான போட்டிகள்: அக்.31-க்குள் விண்ணப்பிக்கலாம்

மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் எம்.டி.எஸ். அகாதெமி, இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் நேரு இளையோர் மையம், பாரதிய வித்யாபவன் ஆகியவை இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கான 26-ஆவது அறிவுக்களஞ்சியம் விருதுப் போட்டிகள் நவம்பர் 8-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளன.
இதில் திருக்குறள், திருவள்ளுவர் ஆத்திச்சூடி, நாலடியார், பாரதிதாசன் பாடல், கட்டுரை உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகளில் முதல் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம். போட்டியில் வெற்றி பெறும் முதல் 5 பேருக்கு அறிவு மலர், அறிவுக் கதிர் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படும். இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் "எம்.டி.எஸ். அகாதெமி, மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், ஸ்ரீ கற்பகவல்லி வித்யாலயம், 4, கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை, 600004' என்ற முகவரியிலோ, 044-24951415, 9444991415 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment