வி.ஐ.பி., வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, October 13, 2015

வி.ஐ.பி., வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

வி.வி.ஐ.பி.,கள் வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை விஜயகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தராக பதவி வகித்தவர் கல்யாணி. இவரது பணி நியமனம் செல்லாது என, உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. இதற்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. கல்யாணிக்கு 2014 ஜூலை 7 ல் பல்கலை வளாகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் 50
பேரை, வெயிலில் காத்திருக்க வைத்தனர். அவர்கள் மலர் துாவி கல்யாணியை வரவேற்றனர். இது குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது. தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் வரவேற்பில் பங்கேற்கத் தடை விதிக்க, பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, விஜயகுமார் மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி கொண்ட அமர்வு விசாரித்தது. மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார். பல்கலை பொது மற்றும் நர்சரி பள்ளி முதல்வர் பத்மப்பிரியா, ஆசிரியை ஸ்ரீவித்யா ஆஜராகி வருத்தம் தெரிவித்தனர்.
நீதிபதிகள்,'பொது நிகழ்ச்சிகள் மற்றும் வி.வி.ஐ.பி.,கள் வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என, தனது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அந்நகலை நாளை (அக்.,14) சமர்ப்பிக்க வேண்டும்,' என்றனர்.

No comments:

Post a Comment