நாணய ஆராய்ச்சிக்கு இளைய தலைமுறையினர் முன்வர வேண்டும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, October 13, 2015

நாணய ஆராய்ச்சிக்கு இளைய தலைமுறையினர் முன்வர வேண்டும்

இளைய தலைமுறையினர் மற்றும் கல்லுாரி மாணவர்கள், நாணயவியல் மற்றும் தொல்பொருள் தொடர்பான ஆய்வுகளில், அதிக அளவில் ஈடுபட்டு, வரலாற்று ஆராய்ச்சியை நடத்த வேண்டும், என, தமிழ்நாடு நாணயவியல் சங்கத் தலைவரும், தினமலர் நாளிதழ் ஆசிரியருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வேண்டு கோள் விடுத்து உள்ளார்.
இந்திய நாணயவியல் சங்கத்தின், 98ம் ஆண்டு கருத்தரங்கு மற்றும் நாணயக் கண்காட்சி சென்னையில் நேற்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு விழாவில், தமிழ்நாடு நாணயவியல் சங்கத் தலைவரும், தினமலர்
நாளிதழ் ஆசிரியருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:
இந்தக் கருத்தரங்கில், நாணயவியல் தொடர்பான ஆய்வு குறித்து, 1985ல், நான் கட்டுரையை சமர்ப்பித்த போது, என் ஆய்வு குறித்து பல பேராசிரியர்கள், என் முன்னால் அமர்ந்து பலவிதமான கேள்விகளைக் கேட்டனர். அவற்றுக்கெல்லாம் பதில் அளித்த பின், எனது ஆய்வுக் கட்டுரை, இந்திய நாணயவியல் சங்க இதழில் வெளியானது. அதன்பின், ஏராளமான ஆய்வுகள் மேற்கொண்டு, புத்தகங்கள் எழுதி ஆய்வுப் பயணம் தொடர்கிறது.
எனக்கு அதிகமான செல்வத்தை இறைவன் கொடுத்துள்ளான். அந்த செல்வத்தை வீணடிக்காமல், இதுபோன்று இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் ஆய்வுகளுக்கும், கருத்தரங்கங்கள் நடத்தவும் செலவிடுகிறேன். கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், ஓரளவுக்கு பழைய நாணயங்கள் கிடைத்தன. ஆனால், தற்போது வரலாற்று நாணயங்கள் கிடைப்பதில்லை; எனவே, நாணய ஆராய்ச்சியில் இது முக்கியமான தருணமாகும்.
வரலாற்று நாணயங்களை சேகரிக்கவும், அவை குறித்து ஆராய்ச்சி செய்வதற்கும், தொல்பொருள் தொடர்பான ஆய்வுகளுக்கும், இளைய தலைமுறையினரும், கல்லுாரி மாணவ, மாணவியரும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment