இளைஞர் எழுச்சி நாள்: அரசு சார்பில் இன்று விழா - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, October 15, 2015

இளைஞர் எழுச்சி நாள்: அரசு சார்பில் இன்று விழா

குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த ஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் பிறந்த தினத்தை ஒட்டி, தமிழக அரசு சார்பில் இளைஞர் எழுச்சி தினம் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த அப்துல் கலாமின் பிறந்த தினமான அக்டோபர் 15-ஆம் தேதி, தமிழகத்தில் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்த தினத்தை ஒட்டி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இதற்கான நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் அமைச்சர்கள் பி.பழனியப்பன், எஸ்.சுந்தரராஜ், கே.சி.வீரமணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

No comments:

Post a Comment