பல்கலை., உறுப்புக் கல்லூரிகளை அரசு கல்லூரியாக மாற்ற கோரிக்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, October 11, 2015

பல்கலை., உறுப்புக் கல்லூரிகளை அரசு கல்லூரியாக மாற்ற கோரிக்கை

ல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்ற வேண்டும் என, அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தினர் உயர்கல்வி செயலரிடம் மனு கொடுத்துள்ளனர்.

அரசு கல்லூரி ஆசிரியர் மன்ற மாநில பொறுப்பாளர்கள், கல்லூரி கல்வி இயக்குனரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது, இயக்குனர் அளித்த உத்தரவாதம் குறித்து மாநில தொடர் நடவடிக்கை குழு தலைவர் குமார் கூறியதாவது: 2015 அக்.,26, 27, 28ல் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். 2007க்கு பின், பணியில் சேர்ந்த கல்லூரி ஆசிரியர்களுக்கு தர ஊதியம் ரூ.7 ஆயிரம் வழங்க அரசிடம் இருந்து இயக்குனர் அலுவலகத்திற்கு ஆணை வந்துள்ளது.

31 அரசு கலைக்கல்லூரிகளில் காலி முதல்வர் பணியிடங்களை இரு வாரத்திற்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். 5 மாதமாக சம்பளமின்றி பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான கோப்பு நிதித்துறையில் இருக்கிறது. விரைவில் உத்தரவு வரும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment