விளையாட்டு வீரர்களுக்கு வனத்துறை பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீடு :பணி விதிமுறையில் திருத்தம் செய்து அரசு உத்தரவு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, March 28, 2016

விளையாட்டு வீரர்களுக்கு வனத்துறை பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீடு :பணி விதிமுறையில் திருத்தம் செய்து அரசு உத்தரவு.

விளையாட்டு வீரர்களுக்கு வனத்துறை பணிகளில் 10 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டு 14 ஆண்டுகளுக்குப் பிறகு பணிவிதிமுறையில் திருத்தம் செய்து அரசு உத்தரவு பிறப் பித்துள்ளது.தமிழக அரசின் வனத்துறை யில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், தலைமை வனப் பாதுகாவலர், வனப்பாதுகாவலர் என பல்வேறு நிலைகளில் அதிகாரிகளும், வனவர்கள், வனக் காப் பாளர்கள், வனக்காவலர்கள் உள் ளிட்ட சார்நிலைப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இந்திய வனப்பணி (ஐஎப்எஸ்) அதிகாரிகள் மத்திய அரசு பணி யாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மூலமாகவும், உதவி வனப்பாது காவலர்கள் (தமிழ்நாடு மாநில வனப் பணி), வனச்சரகர்கள் (ரேஞ்சர்கள்) ஆகியோர் தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாகவும் தேர்வுசெய்யப்படுகிறார்கள். வனவர் (பாரஸ்டர்), வன காப்பாளர் (பாரஸ்ட் கார்டு), வனக்காவலர் (பாரஸ்ட் வாட்சர்) ஆகியோர் 2014 வரையில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வுசெய்யப் பட்டனர்.இந்நிலையில், கடந்த ஆண்டு வனத்துறை பணியாளர்களை தேர்வுசெய்வதற்காக தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு என்ற புதிய தேர்வு வாரியம் ஏற்படுத்தப்பட்டது. அதன்மூலமாக வனவர், களஉதவியாளர் ஆகியபணிகளில் 181 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டுபிப்ரவரி மாதம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு நவம்பர் இறுதி வாரத்தில் முடிவு வெளியிடப்பட்டது.

இறுதி தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.ஏற்கெனவே, வனத்துறையில் வனவர், வனக்காப்பாளர், வனக் காவலர் ஆகிய பணிகளில் விளை யாட்டு வீரர்களுக்கு 10 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு வழங்கி தமிழக அர சின் சுற்றுச்சுழல் மற்றும் வனத் துறை கடந்த 18.6.2002 அன்று அரசாணை (எண் 132) வெளியிட் டிருந்தது.இந்த நிலையில், வனத்துறை பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா கடந்த 29.2.2016 அன்று ஓர் உத்தரவு (அரசாணை எண் 35) பிறப்பித்துள்ளார்.அதில், “பல்கலைக்கழக வீரர் கள், மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களுக்கு வனத்துறை பணிகளில் (வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர்) 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப் படும். இந்த இடஒதுக்கீடு அளிக்க வசதியாக தமிழக அரசின் வனத் துறை சார்நிலைப் பணி விதிமுறை களில் திருத்தம் செய்யப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.விளையாட்டு வீரர்களுக்கு வனத் துறையில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக அரசாணை 2002-லேயே வெளியிடப்பட்டு விட்டது. ஆனால், அதற்கேற்ப பணி விதிமுறைகளில் மாற்றம் செய்யாத காரணத்தினால் இடஒதுக்கீடு நடை முறைப்படுத்தப்படவில்லை.

பணிவிதி முறைகளில் திருத்தம் செய்வது தொடர்பாக தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு அரசுக்கு கருத்துரு அனுப்பியது. இதைத்தொடர்ந்து, வனத்துறை சார்நிலைப் பணி விதிமுறைகளில் திருத்தம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.பல்கலைக்கழக வீரர்கள், மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களுக்கு வனத்துறை பணிகளில் (வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர்) 10 இடஒதுக்கீடு அளிக்கப்படும்.

No comments:

Post a Comment