தமிழக பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் உயர்மட்ட பாதுகாப்பு வழங்கக் கோரி வழக்கு: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, March 28, 2016

தமிழக பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் உயர்மட்ட பாதுகாப்பு வழங்கக் கோரி வழக்கு: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர்கள் மையத்தின் தலைவரும், கூடுதல் அரசு வழக்கறிஞருமான பி.சஞ்சய் காந்தி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

புவிசார் குறியீடு பொருட்கள் பதிவு மற்றும் பாதுகாப்பு சட்டம் 1999-ன் படி புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு உயர்மட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியமான ஒன்று. புவி சார் குறீயீடு சட்டம் பிரிவு 22(2) ல் மத்திய அரசு எந்தப் பொருட் களுக்கு உயர்மட்ட பாதுகாப்பு வழங்க நினைக்கிறதோ, அந்தப் பொருட்களுக்கு மட்டுமே உயர் மட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில், தமிழகத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லி, தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் வீணை, கோவை கோரா காட்டன், பவானி ஜமுக்காளம், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு உள் ளிட்ட 238 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் கைவினை மற் றும் கைத்தறி விவசாயப் பொருட் களுக்கு உயர்மட்டப் பாது காப்பு வழங்காததால், அப் பொருட்களின் உற்பத்தியில் ஈடு படுவோர் பொருளாதார ரீதியாக நலிவடைந்து வருகின்றனர். இது தொடர்பாக மத்திய வணிகம் மற்றும் தொழில் கொள்கை மேம் பாட்டு அமைச்சக செயலருக்கு மனு அனுப்பினோம்.

அதற்கு அவர்கள், இந்த மனுவை புவிசார் குறீயீடு பதிவகத்துக்கு பரிந்துரைத்துள்ளதாக பதிலளித்துள்ளனர். ஆனால் அதன்பிறகு எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. இதுதொடர் பாக கடைசியாக கடந்த 6-ம் தேதி மீண்டும் மனு அனுப்பி வைத்துள்ளோம். அதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதி பதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகி யோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வழக்கறிஞர் பி.சஞ்சய்காந்தியும், மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசனும் ஆஜராகி வாதிட்டனர். இதை யடுத்து, மனுதாரர் மத்திய அரசு செயலருக்கு அனுப்பி வைத்துள்ள கோரிக்கை மனுவை 8 வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment