வாட்ஸ் அப்பில் இருந்து டெலிபோன்களுக்கு பேசும் வசதி விரைவில் அறிமுகம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, March 29, 2016

வாட்ஸ் அப்பில் இருந்து டெலிபோன்களுக்கு பேசும் வசதி விரைவில் அறிமுகம்

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. உலகம் உள்ளங்கையில் சுருங்கி விட்டது. உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் செல்போன், இணையதளம், வாட்ஸ் அப், சாட்டிங், வீடியோ அழைப்பு போன்றவற்றால் ஒரு நொடியில் தொடர்பு கொண்டு
பேசும் வசதி உள்ளது.ஆரம்பத்தில் கம்ப்யூட்டர், லேப்–டாப் போன்றவற்றின் மூலம் பேசுபவர்களின் உருவத்தை பார்த்து கொண்டே பேசும் வசதி இருந்தது.இப்போது செல்போன், ஐபோன், டேப் போன்ற சாதனங்கள் மூலமாக ஒருவரை ஒருவர் நேரில் பார்த்து பேசும் உணர்வை ஏற்படுத்தும் தகவல் தொழில்நுட்பம் பரிணாமம் பெற்றுள்ளது.‘வாட்ஸ் அப்’ என்னும் நவீன தகவல் தொடர்பு சாதனம் தற்போது உலகம் முழுவதும் ஒரு குடைக்குள் கொண்டு வந்து விட்டது.உலகின் எந்த பகுதியில் ஒரு நிகழ்வு நடந்தாலும் அதனை படத்துடன் உடனே பரிமாறிக் கொள்ளும் இந்த வசதி நகரங்கள் மட்டுமின்றி கிராமங்கள் வரை வெகுவாக சென்றடைந்துள்ளது.செல்போன் மூலம் ‘வாட்ஸ் அப்’ வசதியை பயன்படுத்துவதற்கு தற்போது கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை. முற்றிலும் இலவசமாக்கப்பட்ட இந்த வசதியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.வாட்ஸ் அப் வசதி தற்போது செல்போன்களுக்கு இடையே மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. விரைவில் வாட்ஸ் அப்பில் இருந்து தரை வழி போன்களுக்கும் (டெலிபோன்) பேசும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.4ஜி நெட்ஒர்க் வசதியுள்ள ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் இந்த வசதியை விரைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி வாட்ஸ் அப்பில் இருந்து டெலிபோனுக்கு பேசும் வசதியை செயல்படுத்த தீவிரம் காட்டுகிறார்.தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் டெலிபோன்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் டெலிபோன்களில் இந்த வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் டெலிபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ‘டிராய்’ முடிவு செய்து இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.இதனால் டெலிபோன் சரண்டர்களை குறைப்பதோடு புதிய இணைப்புகளுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று பி.எஸ்.என்.எல். கருதுகிறது.

No comments:

Post a Comment