'நோட்டா'வுக்கு தனி சின்னம் ஓட்டளிக்க விரும்பாதோர் எண்ணிக்கை அதிகரிக்கும்? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, March 29, 2016

'நோட்டா'வுக்கு தனி சின்னம் ஓட்டளிக்க விரும்பாதோர் எண்ணிக்கை அதிகரிக்கும்?

'நோட்டா' எனப்படும், 'எந்த வேட்பாளருக்கு ஓட்டளிக்க விரும்பவில்லை' என்ற, வாக்காளர்களின் தெரிவு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் தேர்தலில் அதிகரிக்கும் என தெரிகிறது.

தமிழகத்தில், கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், '49 ஓ' என்ற படிவத்தை பூர்த்தி செய்து அளித்தால், யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்ற பட்டியலில், வாக்காளர்கள் சேர்ந்தனர். அவ்வாறு, யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாத வாக்காளர்கள், வேட்பாளர்களால் அடையாளம் காணப்படும் நிலை ஏற்பட்டதால், இந்த முறைக்கு வரவேற்பு அதிகம் இல்லை. எனினும், தமிழகம் முழுவதும், 24 ஆயிரத்து, 859 பேர், யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என தெரிவித்தனர். இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில், ஓட்டுப்பதிவு இயந்திரத்திலேயே, நோட்டாவுக்கு என, தனியாக பொத்தான் வைக்கப்படுகிறது.

அனைத்து வேட்பாளர்கள் பெயர்களுக்கு கீழே, கடைசியாக, நோட்டா பொத்தான் மற்றும் அதற்கான சின்னம் குறிக்கப்பட உள்ளது. அந்த பொத்தானை அழுத்தி, யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்யலாம்.இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த தேர்தலில், 1,391 பேர், ஓட்டு போட விரும்பவில்லை என தெரிவித்தனர்; இந்த முறை, அதிகமானோர், நோட்டா பொத்தானை அழுத்துவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment