இந்திய வரலாற்றில் முதல் முறையாக 22 செயற்கைகோள்களுடன், பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட் விண்ணில் பாய்கிறது மே மாதம் ‘கவுண்ட்டவுண்’ தொடக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, March 31, 2016

இந்திய வரலாற்றில் முதல் முறையாக 22 செயற்கைகோள்களுடன், பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட் விண்ணில் பாய்கிறது மே மாதம் ‘கவுண்ட்டவுண்’ தொடக்கம்

இந்திய வரலாற்றில் முதன் முறையாக 22 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட் மே மாதம் விண்ணில் ஏவப்படுகிறது என்று விஞ்ஞானிகள் கூறினர்.

22 செயற்கைகோள்கள்

ஒரு ராக்கெட்டுடன், வழக்கமாக 4 அல்லது 5 செயற்கைகோள்களை இஸ்ரோ இணைத்து அனுப்புவது வழக்கம். அதிகபட்சமாக கடந்த 2008-ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி-9 ராக்கெட்டுடன், 10 செயற்கைகோள்கள் இணைத்து அனுப்பப்பட்டன. இதுவே இஸ்ரோவின் சாதனையாக இருந்தது.

இந்த சாதனையை தானே முறியடிக்கும் வகையில் இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி.-34 ராக்கெட்டில் 22 செயற்கைகோள்களை இணைத்து அனுப்ப உள்ளது. இதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அனைத்து பணிகளும் வெற்றி அடையும் பட்சத்தில், இந்த ராக்கெட்டு விண்ணில் பாய்வதற்கான ‘கவுண்ட்டவுண்’ மே மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கூறியதாவது:-

மே மாதம்

இஸ்ரோ சார்பில் இதுவரை 32 பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. 33-வது ராக்கெட்டு அடுத்த மாதம் (ஏப்ரல்) ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1-ஜி என்ற ஒரு செயற்கைகோளுடன் விண்ணில் பாய்கிறது.

அதன் தொடர்ச்சியாக இந்திய வரலாற்றில் முதன் முறையாக பி.எஸ்.எல்.வி.சி-34வது ராக்கெட் மூலம் 22 செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து மே மாதம் விண்ணில் செலுத்துவதற்கான பணிகளை இஸ்ரோ தீவிரமாக செய்து வருகிறது.

வெளிநாடுகள்

இஸ்ரோவை பொறுத்தவரை நமது நாட்டிற்கு மட்டுமின்றி, வெளிநாட்டுக்கு சொந்தமான செயற்கைகோள்களையும் இந்திய ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தும் பணியினை செய்து வருகிறது. அந்த வகையில் பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட்டில் விண்ணில் செலுத்தப்படும் 22 செயற்கைகோள்களில் 18 செயற்கைகோள்கள் அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்ததாகும். மீதமுள்ள 4 செயற்கைகோள்கள் நமது நாட்டிற்கு சொந்தமானது.

அமெரிக்கா உள்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் நமது இஸ்ரோ மூலம் செயற்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு மிக முக்கிய காரணம் குறைந்த செலவில் வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தப்பட்டு வருவது தான்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment