பிளஸ்–2 உயிரியல் தேர்வில் விலங்கியல் பிரிவில் கேள்விகள் கடினமாகவும், தாவரவியலில் எளிதாகவும் இருந்தன மாணவ–மாணவிகள் கருத்து - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, March 29, 2016

பிளஸ்–2 உயிரியல் தேர்வில் விலங்கியல் பிரிவில் கேள்விகள் கடினமாகவும், தாவரவியலில் எளிதாகவும் இருந்தன மாணவ–மாணவிகள் கருத்து

பிளஸ்–2 உயிரியல் தேர்வில் விலங்கியல் பிரிவில் கேள்விகள் கடினமாகவும், தாவரவியல் பிரிவில் எளிதாகவும் இருந்தன என்று மாணவ–மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.உயிரியல் தேர்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு கடந்த 3–ந்தேதி தொடங்கின. தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், விலங்கியல் ஆகிய தேர்வுகள் முடிந்துவிட்டன. நேற்று உயிரியல் தேர்வு, தாவரவியல், வர்த்தக கணிதம், வரலாறு ஆகிய தேர்வுகள் நடைபெற்றன.கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் என்று விருப்ப பாடமாக எடுத்துள்ள மாணவர்களை உயிரி கணிதம்(பயோ –மேக்ஸ்) குரூப்பை சேர்ந்தவர்கள் என்றும், விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களை எடுத்து படிக்கும் மாணவர்களை சுத்த அறிவியல் பிரிவு என்றும் அழைக்கப்படுகிறார்கள்.விலங்கியல் பகுதியில் கடினமான கேள்விகள்

நேற்று தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த உயிரியல் மாணவ–மாணவிகள் கூறியதாவது:–உயிரியல் பிரிவில் முதல் பிரிவு தாவரவியல் பகுதியாகும். அந்த பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் எளிமையாக இருந்தன. கேள்விகள் மிக எளிமையாக இருந்தன. எனவே சிறப்பாக படிக்கும் மாணவர்கள் 100 சதவீதம் எடுப்பது எளிது.ஆனால் விலங்கியல் பிரிவில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் மிக கடினமாக இருந்தன. கடைசியில் கேட்கப்பட்ட 37–வது கேள்வி மட்டும் எளிமையாக இருந்தது. இது 10 மதிப்பெண் கேள்வியாகும்.விலங்கியல் பிரிவில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் கடினமாகத்தான் இருந்தன. குறிப்பாக 3 மதிப்பெண் கேள்விகள் மிகக்கடினமாக இருந்தன. அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டுமென்றால் புத்தகத்தை நன்றாக படித்திருந்தால் மட்டுமே முடியும். மொத்தத்தில் விலங்கியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் கடினமானவைதான். 100 சதவீத மதிப்பெண் பெறுவது மிகக்கடினம். விலங்கியல் உயிரியல் பாடத்தினால் பல மாணவர்கள் பெயில் ஆவார்கள்.இவ்வாறு அந்த மாணவ–மாணவிகள் தெரிவித்தனர்.விலங்கியல் ஆசிரியர் டேவிட் ராஜா கூறியதாவது:–உயிரியல் தேர்வில் தாவரவியல் கேள்விகள் அனைத்தும் மிக எளிமையாக இருந்தன. அவற்றை மாணவர்கள் நன்றாக எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் விலங்கியல் பிரிவில் கடைசி கேள்வி எளிமையாக இருந்தது. ஆனால் 3 மார்க் கேள்விகள் அனைத்தும் சுற்றி வளைத்து கேட்கப்பட்டு இருந்தன. பாடத்தை புரிந்து நன்றாக படித்து இருந்தால் மட்டுமே அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு

உயிரியல் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணை கொண்டுதான் மருத்துவ படிப்பு, கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு கட் ஆப் மதிப்பெண் கணக்கிடப்படும். இந்த வருடம் உயிரியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருப்பதால் மருத்துவ ‘கட் ஆப்’ மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது.வணிக கணிதத் தேர்வும் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் மிக எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment