468 ரெயில் பெட்டிகளில் பயோ-டாய்லட் நிறுவப்பட்டது: ரெயில் நிலையங்கள் அசுத்தமாவது குறைய வாய்ப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, March 26, 2016

468 ரெயில் பெட்டிகளில் பயோ-டாய்லட் நிறுவப்பட்டது: ரெயில் நிலையங்கள் அசுத்தமாவது குறைய வாய்ப்பு

மனிதக்கழிவுகள் தண்டவாளங்களில் கிடப்பதால் ரெயில் நிலையங்கள் அசுத்தமாக காட்சியளிப்பதுடன் தண்டவாளங்களும் அரிக்கப்பட்டு நாசமடைகின்றன. இதனை தடுப்பதற்காக ரெயில் பெட்டிகளில் தற்போதுள்ள வழக்கமான கழிவறைகளுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பயோ-டாய்லட்டுகளை நிறுவப்பட்டு வருகிறது.

இதுவரை 468 ரெயில் பெட்டிகளில் இந்த புதிய கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் இந்த கழிவறைகளை நிறுவுவதற்கான முயற்சியில் ரெயில்வே ஈடுபட்டுள்ளது.

பயோ-டாய்லட்டுகள் என அழைக்கப்படும் இந்த கழிவறைகள் மனிதக்கழிவுகளை அனாரோபிக் பாக்டீரியாக்கள் மூலம் டிகிரேடு செய்து தண்ணீராகவும், மீத்தேன் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு உள்ளிட்ட நச்சுத்தன்மையற்ற வாயுக்களாகவும் மாற்றிவிடுகின்றன. மீதமுள்ள கழிவுகள் எவ்வித கிருமிகளும் இன்றி கழிவுப்பெட்டியில் தங்கி விடுகின்றன.

எப்படி இருந்தாலும், இந்த கழிவறைகள் தொடர்ந்து ஒழுங்காக செயல்படுகின்றனவா? என்பதை அவ்வபோது சோதனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஏனெனில், பயணிகள் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பேப்பர் கப்புகள், கிழிந்த துணிகள், பாலித்தீன் பைகள், குட்கா கவர்கள், நேப்கின்கள் ஆகிய குப்பைகளால் அடைத்து விட வாய்ப்புகள் உண்டு.

No comments:

Post a Comment