அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 10,000 ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கு ஆன்லைனில் தேர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, May 8, 2016

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 10,000 ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கு ஆன்லைனில் தேர்வு

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 10,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விரைவில் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட உள்ளதாக மாநில அரசு  அறிவித்துள்ளது.டெல்லியில் 1,021 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் சுமார் 17,000 ஒப்பந்த ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு,  அரசு சார்பில் வழங்கப்படும் சுலுகைகள் எதுவும் கிடையாது. இதனால், ஆசிரியர் பணிக்கான இடங்கள் காலியாகவே இருந்து வருகிறது. தங்களது பணியை  நிரந்தரமாக்கக் கோரி மாநில அரசுக்கு ஒப்பந்த ஆசிரியர்கள் வலியுறுத்தி வந்தனர். இதன் பின்னர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9,623 கூடுதல் ஆசிரியர் பணிக்கு  ஒப்புதல் அளிக்கப்பட்டன. இந்நிலையில், அரசு பள்ளிகளில் உள்ள 10,000 ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த மாநில அரசு முடிவு  செய்துள்ளது.

இது குறித்து மாநில அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் தேர்வு  நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கவர்னரிடம் ஒப்புதல் பெற அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் தேர்வு தேதி குறித்து  அறிவிக்கப்படும். இந்த தேர்வில் ஒப்பந்த ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம்.

குறிப்பாக, ஒப்பந்த ஆசிரியர்களுக்கு கூடுதலாக ஐந்து ஆண்டு வரை வயது நிர்ணயம் அறிவிக்கப்படுகிறது. மேலும், ஒரு ஆண்டு அனுபவம் பெற்றுள்ள ஒப்பந்த  ஆசிரியர்களுக்கு 0.75 மதிப்பெண்ணும், மூன்று ஆண்டு அனுபவம் பெற்றுள்ள ஒப்பந்த ஆசிரியர்களுக்கு 2.25 மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்கப்படும்.இவ்வாறு உயர்  அதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment