100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதை கட்டணத்தை எப்படி கணக்கிடுவது? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 24, 2016

100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதை கட்டணத்தை எப்படி கணக்கிடுவது?

தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா அனைவருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவில்,

  “ மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும்.  இதன் காரணமாக அரசு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 1,607 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கும். இந்தச் சலுகை 23.5.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை யாருக்கெல்லாம் பொருந்தும், மின் கட்டணத்தை எப்படி கணக்கிடுவது என்பது குறித்து தமிழக மின்வாரிய உயரதிகாரிகள் கூறியதாவது:தற்போது, முதல் 100 யூனிட் பயன்படுத்தும் நுகர்வோருக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ.3. இதில் தமிழக அரசு மானியம் ரூ.2 போக மீதமுள்ள ஒரு ரூபாய் மட்டும் நுகர்வோரிடம் வசூலிக்கப்படுகிறது. மேலும் கட்டணத்தில் 1 முதல் 100 யூனிட்டுகளுக்கு ஒரு ரூபாயும், 101 முதல் 200 யூனிட்டுக்கு ரூ.1.50ம் வசூல் செய்யப்படுகிறது. அதுவே501 யூனிட்டுக்கு மேல் ரூ.6.60 வசூலிக்கப்படும்.

தற்போது உள்ள புதிய நடைமுறைபடி ஒரு நுகர்வோர் எவ்வளவு யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்தி இருந்தாலும், அதில் முதல் 100 யூனிட் மின்சாரம் போக மீதமுள்ள யூனிட்டுக்கு மட்டும் தான் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், 500 யூனிட்டுக்கு மேல் சென்றால், முதல்100 யூனிட் கழித்து விட்டு மீதமுள்ள 400 யூனிட்டுகளுக்கு ரூ.3 என கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment